இவர் மேல் என்ன இவ்வளவு வன்மம்.. சிவகுமாரை கழட்டிவிட்ட பிக்பாஸ்.. இந்த வாரம் சத்தமில்லாமல் நடந்த எவிக்சன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இவர் மேல் என்ன இவ்வளவு வன்மம்.. சிவகுமாரை கழட்டிவிட்ட பிக்பாஸ்.. இந்த வாரம் சத்தமில்லாமல் நடந்த எவிக்சன்

இவர் மேல் என்ன இவ்வளவு வன்மம்.. சிவகுமாரை கழட்டிவிட்ட பிக்பாஸ்.. இந்த வாரம் சத்தமில்லாமல் நடந்த எவிக்சன்

Marimuthu M HT Tamil
Nov 30, 2024 08:12 PM IST

இவர் மேல் என்ன இவ்வளவு வன்மம்.. சிவகுமாரை கழட்டிவிட்ட பிக்பாஸ்.. இந்த வாரம் சத்தமில்லாமல் நடந்த எவிக்சன் பற்றிப் பார்ப்போம்.

இவர் மேல் என்ன இவ்வளவு வன்மம்.. சிவகுமாரை கழட்டிவிட்ட பிக்பாஸ்.. இந்த வாரம் சத்தமில்லாமல் நடந்த எவிக்சன்
இவர் மேல் என்ன இவ்வளவு வன்மம்.. சிவகுமாரை கழட்டிவிட்ட பிக்பாஸ்.. இந்த வாரம் சத்தமில்லாமல் நடந்த எவிக்சன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8ஆவது சீசன் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் அடுத்தவாரமே மீண்டும் என்டிரி கொடுத்தார்.

வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர். இதனால், பிக்பாஸ் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.

இப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர்.

விஜய் டிவியின் இன்றைய புரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிய புரோமோவில், ‘’ பூவைக் கட் செய்ததற்கான உண்மையான காரணம் என்ன சாச்சனா’’ என பிக்பாஸ் சீசன் 8 தொகுப்பாளர் விஜய்சேதுபதி, சாச்சனாவிடம் கேட்கிறார்.

கேப்டன்ஸியில் குறைபாடு இருந்தால் மட்டும் தான், பூவை கட் செய்யவேண்டும். இந்நிலையில் இந்த வார கேப்டன்ஸியில் இருக்கும் தீபக்கிடம் இதுகுறித்து கேட்கிறார், விஜய் சேதுபதி. அப்போது பதிலளிக்கும் இந்த வார கேப்டன் தீபக்,’’அவரவர் சாப்பிட்ட தட்டுக்களை அவரவர் தான் கழுவ வேண்டும் என்று சொன்னேன்’’ என விளக்கம் அளிக்கிறார்.

மேலும் விஜய்சேதுபதி, 'கேப்டன்ஸியில் எந்தவொரு தவறும் நடக்கக்கூடாது என பார்த்துக்கொண்டது தப்பா’ என சாச்சனாவிடம் சரமாரியாகக் கேள்விகேட்டார்.

உடனே ’தர்ஷிகா தொடர்ந்து பலநாட்களாக தானே தனது தட்டைக் கழுவினேன்’ என சொன்னதாக சாச்சனா சொல்கிறார். அதைக் கவனித்த விஜய் சேதுபதி ‘யாருக்கெல்லாம் பிரஷர் தாங்க முடியல’எனக் கேள்வி எழுப்புகிறார்.

அப்போது எழுந்து நின்று பதிலளிக்கும் தர்ஷிகா தனக்கு எந்தவொரு பிரஷரும் கிடையாது என விஜய்சேதுபதியிடம் வாக்குமூலம் கொடுக்கிறார்.

அடுத்து சாச்சனா செய்த தவறுகளை சுட்டிக்காட்டும் விஜய்சேதுபதி, ’நீ செய்வது தப்பாக இருக்குது சாச்சனா’ எனக் கூறிவிட்டு அவரை உட்கார வைக்கிறார்.

மஞ்சரி பஞ்சாயத்து:

இந்நிலையில் மஞ்சரி தன்னை அருண் பிரசாத் கை எடுத்துக் கும்பிட்டு கோபத்தைத் தூண்டினார் என கேப்டன் தீபக்கிடம் கூறுகிறார். உடனே, தீபக் மஞ்சரியிடம், ’அது கோபத்தைத்தூண்டும்படி இல்லை’ எனக் கூறுகிறார்.

அடுத்து ‘என்னய்யா எல்லாத்தையும் ஒளிச்சு வைச்சு திங்குறீங்க’ என மஞ்சரி சொன்னது தன்னை கஷ்டப்படுத்தியது’ என கேப்டன் தீபக்கிடம் முறையிடுகிறார், அருண் பிரசாத்.

தான் அவ்வாறு சொல்லவில்லை என மறுக்கிறார், மஞ்சரி. அப்போது அவரது கண்கள் கலங்கியிருக்கிறது. உடனே, பிக்பாஸிடம் முறையிடக் கிளம்புகிறார், மஞ்சரி.

இன்றைய புரோமோவில் மஞ்சரியின் பஞ்சாயத்தை நினைவுகூர்ந்த விஜய்சேதுபதி, மஞ்சரியைக் கை எடுத்துக் கும்பிட்டது கோபமூட்டியது என சொல்லும் மஞ்சரி, நீங்கள் சிவாவிடம் நடந்தது என்ன எனக் கேள்விகேட்கிறார்.

சுவாரசியமே இல்லாத பிக்பாஸ்

சுவாரசியமே இல்லாத பிக்பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக்பாஸ் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். நாமினேஷன் பட்டியலில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் காப்பாற்றப்படுவர். குறைவான வாக்குகளை பெற்றவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்படி கடைசியில் இருந்த சாச்சனா சிக்குவார். இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்ற நிலையில், சிவாஜி கணேசன் போல் வசனம் எல்லாம் பேசிக்காட்டி, பலரை ஈர்த்த அவரது பேரன் சிவகுமார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கார் எனக் கூறப்படுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.