Bigg Boss Season 7: அர்ச்சனா, மாயாவுக்கு பெயிட் புரோமோசன் பணிகள் நடக்குதா.. பின்னணி!
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா மற்றும் மாயா ஆகியோருக்கு பெயிட் புரோமோசன் பணிகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதுபோல், பிக்பாஸ் சீசன் 7 பங்கேற்பாளர்களுக்கு உதவ பெயிட் புரோமோசன் குழுக்கள் மற்றும் பி.ஆர். குழுக்கள் செயல்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அதன் கடைசி கட்டத்தில் உள்ளது. இதனால் போட்டியாளர்களிடையே சண்டை சச்சரவுகள் குறைந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திருப்பத்துடன் வருகிறது. மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது.
மேலும், பிக் பாஸ் 7ஆவது சீசன் இப்போது 14ஆவது வாரத்தில் உள்ளது. கடந்த வாரத்தில் மூன்று நாட்களாக சுற்றிய பணப்பெட்டியில் 16 லட்சம் வந்ததும் அதை எடுத்துக்கொண்டு பூர்ணிமா கிளம்பிவிட்டார். இதனையடுத்து நேற்று விசித்ராவும் எவிக்ட் செய்யப்பட்டுவிட்டார். இறுதியில் விஷ்ணு, மணி, அர்ச்சனா, விஜய் வர்மா, மாயா மற்றும் தினேஷ் ஆகிய ஆறுபேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். அதிலும், விஷ்ணு கிராண்ட் பினாலே டிக்கெட்டை வென்று, இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னேயே மாயாவும், அர்ச்சனாவும் தனக்கான பி.ஆர் மற்றும் பெயிட் புரோமோஷன் டீம்களை செட் செய்துவிட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருப்பதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.
இவர்களுடைய பணி, தங்களது போட்டியாளர்களுக்கான, நேயர்களின் வாக்கு விகிதம் குறையும்போது போலியான நபர்களைக் கொண்டு வாக்களிக்கச் செய்வதாகும். மேலும், இவர்கள் இருவரையும் மிகவும் பாஸிட்டிவாக காட்டி, வீடியோ போட வைத்து, சமூக வலைதளங்களில் நற்பெயரை உண்டுசெய்யமுயற்சிப்பதாகும். இந்த பெயிட் புரோமோஷன் பணிகளுக்காக மட்டும் லட்சக்கணக்கில் சம்பளம் போகிறதாம். அதிலும் மாயாவுக்கு புரோமோஷன் செய்ய அவரது குடும்பத்தினரே இந்த மாதிரியான மறைமுக வேலைகளில் ஈடுபடுவதாகவும், அர்ச்சனாவுக்கு ஒரு சீனியர் சினிமா பி.ஆர்.ஓவின் மகள் புரோமோஷன் பணிகளில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த பிக்பாஸ் சீசன் 7ன் இறுதி முடிவுகள் மாறுபடலாம் எனத் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9