தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Raju: ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்’ - கதாநாயகனான பிக்பாஸ் ராஜூ! - படம் பேர் என்ன?

Bigg Boss Raju: ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்’ - கதாநாயகனான பிக்பாஸ் ராஜூ! - படம் பேர் என்ன?

Praveen Kumar Lenkala HT Tamil
Jul 02, 2024 12:13 PM IST

Bigg Boss Raju: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ராஜூ, தற்போது புதிய திரைப்படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார்.

Bigg Boss Raju: ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்’ - கதாநாயகனான பிக்பாஸ் ராஜூ! - படம் பேர் என்ன?
Bigg Boss Raju: ஜோக்கர் இப்ப ஹீரோ ஆனேன்’ - கதாநாயகனான பிக்பாஸ் ராஜூ! - படம் பேர் என்ன?

கதாநாயகனாக மாறும் பிக்பாஸ் ராஜு 

தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 ன் டைட்டில் வின்னராக மாறியவர் ராஜூ ஜெயமோகன். அந்த நிகழ்ச்சியில், தன்னுடைய இயல்பான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தி, ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்திய ராஜூ தற்போது கதாநாயகனாக அறிமுகம் ஆக இருக்கிறார். 

இப்படத்தை Rain Of Arrows Entertainment சார்பில், சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். முன்னதாக, இவர் எண்ணித்துணிக’ படத்தை தயாரித்து இருந்தார். இரண்டாவது படமாக இப்படத்தை தயாரிக்கிறார். இந்தப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்குகிறார். 

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.