Bigg Boss Kannada Controversy: பிக் பாஸ் முடியும் தருவாயில் எழுந்த சர்ச்சை! மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரால் பரபரப்பு
பிக் பாஸ் 10 கன்னடா முடியும் தருவாயில் இருந்து வரும் இந்த நேரத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. பிக் பாஸ் 10 நிகழ்ச்சிக்காக எழுப்பப்பட்டிருக்கும் செட் விவசாயி நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் எழுப்ப பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
பிரபல டிவி ரியாலிட்டி ஷோவாக திகழும் பிக் பாஸ் கன்னடா நிகழ்ச்சி கலர்ஸ் டிவி கன்னடாவில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 10 ஒளிபரப்பாகி வரும் நிலையில், நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் பிக் பாஸ் சீசன் 10க்கான வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
விவசாய நிலத்தில் உரிய அனுமதி இல்லாமல் பிக் பாஸ் வீடு கட்டப்பட்டிருப்பதாக பிரபல சமூக ஆர்வலரும், பத்திரிகையாளருமான ராகவேந்தராசர் என்பவர் குற்றச்சாட்டை முன் வைத்திருப்பதோடு, இதுதொடர்பாக கிராம பஞ்சாயத்திடமும் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு தெற்கு தாலுகா கெங்கேரி ஹோபாலியில் உள்ள மலகொண்டனஹள்ளி சர்வே எண் 128/1இல் உள்ள 7 ஏக்கர் விவசாய நிலத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக சட்டவிரோதமாக வீடு கட்டப்பட்டுள்ளது. இங்கு உரிய அனுமதி இல்லாமல் வணிக செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெங்களுரு தெற்கு துணை கோட்ட அதிகாரி ராகவேந்திராசர் உரிய ஆவணங்களை சமர்பித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தயாநந்திடமும் புகார் அளித்துள்ளார். விவசாய நிலத்தில் சட்டவிரோத வணிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரையடுத்து பெங்களுரு தெற்கு தாலுகா தாசில்தார் சீனவாசன், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 கன்னடா, கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்குகிறார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை போல், கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியும் இந்த வாரத்துடன் முடிவடைவதாக உள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 இறுதி கட்டத்தை எட்டியிருக்கும்போது, நிகழ்ச்சிக்காக கட்டப்பட்ட வீடு தொடர்பாக எழுந்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9