அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக் பாஸ் ஜூலி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக் பாஸ் ஜூலி

அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிக் பாஸ் ஜூலி

Aarthi V HT Tamil Published May 07, 2022 05:57 PM IST
Aarthi V HT Tamil
Published May 07, 2022 05:57 PM IST

நடிகை ஜூலி தனது கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்து உள்ளார்.

<p>பிக் பாஸ் ஜூலி</p>
<p>பிக் பாஸ் ஜூலி</p>

ஜல்லிக்கட்டில் அவர் சம்பாதித்த பெயரை, அந்த நிகழ்ச்சி சுக்கு நூறாக உடைத்தது. ஜூலி என்றாலே பொய், போலி என பெயர் வாங்கிக் கொடுத்தது. அத்துடன் ஜூலி மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கமல் ஹாசன் கூட நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சித்திருந்தார். என்னதான் பிக்பாஸ் 4 , சீசன்கள் முடிந்திருந்தாலும், ஜூலி வாங்கிய பெயர் மட்டும் காணாமல் போகாமலேயே இருந்தது. கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அவர் சென்ற இடம் எல்லாம் கடுமையான போராட்டங்களை சந்தித்து வந்தார்.

இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலி போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். ஒரு பொருளை தொலைத்தால் அந்த இடத்தில் தான் சென்று தேட வேண்டும் என பெரியவர்கள் சொல்வார்கள். அந்த பார்முலாவை ஜூலி கையில் எடுத்து இருந்தார். எந்த பிக் பாஸில் தன் பெயரை விட்டாரோ, அதே பிக் போஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது அவர் மக்கள் மனதை வென்று இருக்கிறார். அவர் உண்மையான கேரக்டரை தெரிந்து கொள்ளாமல் தவறாக புரிந்து கொண்டோம் என பலரும் வேதனை கூட தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஜூலி தற்போது தனது கண்களில் லேசர் அறுவை சிகிச்சை செய்து முடித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் நான் மருத்துவமனையில் லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். என் கண்கள் தொடர்பாக விசாரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி" என குறிப்பிட்டிருந்தார். அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.