எல்லாம் ஸ்ட்ரெயிட் அட்டாக் தான்.. வந்த உடன் வம்புக்கு இழுக்கும் போட்டியாளர்கள்.. தொடங்கியது 5வது வார நாமினேஷன்
பிக்பாஸ் வீட்டிற்கு தீபாவளி போனஸாக 6 புதிய போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், தற்போது 5வது வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று வாரங்களாக மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் நான்காவது வார இறுதியான நேற்று எந்த போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. மேலும் நேற்று (03/11/2024)புதிதாக ஆறு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்தனர். புது போட்டியாளர்களின் வருகையால் பிக்பாஸ் வீடு சற்று சுவாரஸ்யம் அதிகரிக்க தொடங்கியது.
போராடும் போட்டியாளர்கள்
ஏனெனில் புதிதாக நுழைந்தவர்கள் இதற்கு முந்தைய எபிசோடுகளை பார்த்து போட்டியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை மேலும் சிறப்பாக நடக்க உதவி புரிவதால் பழைய போட்டியாளர்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள போராடி வருகின்றனர்.
முதல் ஓபன் நாமினேஷன்
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் 5வாரத்தின் முதல் நாளான இன்று, இந்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் தொடங்கியுள்ளது, அதில், ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்ய வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தது.
இதுவரை நடந்த பிக்பாஸ் வீட்டில் நடந்தவற்றை பார்த்து விட்டு வந்த வைல்டு கார்டு போட்டியாளர்கள் தங்களது நாமினேஷனைத் தொடங்கியுள்ளனர். மேலும், அவர்கள் நாமினேட் செய்ததற்காந காரணத்தையும் கூறி உள்ளனர். இதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
முழுமையாக விளையாடாத தீபக்
இந்த வீடியோவில் முதலில் வந்த ரியா தீபக்கை நாமினேட் செய்துள்ளார். அடுத்ததாக வந்த மஞ்சரியும் தீபக்கை நாமினேட் செய்துள்ளார். தீபக் இன்னும் அழரது முழுமையான கேமை விளையாடவில்லை எனக் கூறி இந்த நாமினேஷனை கூறியுள்ளார்.
அடுத்ததாக வந்த சிவா, சாச்சனாவை நாமினேட் செய்துள்ளார். அடுத்ததாக வந்த ரயனும் சாச்சனாவை நாமினேட் செய்து, அவர் பல இடங்களில் கம்ஃபெர்ட்டாகவே இல்லை எனக் கூறியுள்ளார்.
ஓவர் ஷாடோ சுனிதா
பின்னர் வந்த அருண், சுனிதாவை நாமினேட் செய்துள்ளார். அடுத்ததாக வந்த ராணவ்வும் சுனிதா ஒரு விஷயத்தை ஓவர் ஷாடோ செய்கிறார் எனக் கூறி அவரை நாமினேட் செய்துள்ளார். அடுத்ததாக வந்த வர்ஷினி அருணை நாமினேட் செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து வந்த அன்ஷிதாவும் அருணை நாமினேட் செய்து, அவர் ஒளிந்து கேம் விளையாடுகிறார் என விமர்சித்தார்.
இந்நிலையில், புதிதாக வந்த போட்டியாளர்கள் பழைய போட்டியாளர்களின் மத்தியில் தனியாக தெரிய வேண்டும் எனவும் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இனிவரும் நாட்கள் பிக் பாஸ் சீசன் 8 அதிக சுவாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய போட்டியாளர்கள்
சில தினங்களுக்கு முன்பில் இருந்தே பிக்பாஸ் 8இல் நுழைய போகும் புதிய போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் டி.எஸ்.கேவும் கலந்து கொள்வதாக இருந்தது. இருப்பினும் நேற்றைய எபிசோடில் உள்ளே நுழைந்த புதிய போட்டியாளர்களின் டி.எஸ்.கே இல்லை. மேலும் முன்னதாக வெளிவந்த தகவலின் அடிப்படையில் மஞ்சரி, சிவாஜி தேவ், வெங்கட் ஆகியோர் பிக் பாஸ் வைல்ட் கார்ட் போட்டியளராக உள்ளே நுழைந்துள்ளனர். கூடுதலாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலமான நடிகர் ராயன் மற்றும் ரியா தியாகராஜன் ராணவ் ஆகியோர் புதிதாக நுழைந்துள்ளனர். விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்பி வைத்தார்.
உறுதியளித்த போட்டியாளர்கள்
போட்டியாளர்கள் தங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்வதாக உறுதியளித்து பிக்பாஸ் வீட்டிற்குள் விளையாடச் சென்றனர்.
அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போதே, அங்குள்ளவர்களுக்கு ஏதனும் ஒரு பட்டப் பெயரையோ, அவர்கள் எப்படி கேம் விளையாடுகிறார்கள் என்பதையோ தெரிவிக்க வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டிருந்தது. பின், போட்டியாளர்களுடன் இணைந்து நாமினேஷன், நாமினேஷன் ஃபிரி பாஸ் போன்றவை குறித்தும், தங்களது கேம் ஸ்டார்டெஜி குறித்தும் விவாதித்தனர்.
டாபிக்ஸ்