தலைக்கணம் ஏறிய முத்துக்குமரன்.. வெறுத்து போன போட்டியாளர்கள்.. லெஃப்ட் ரைட் வாங்கிய விஜய் சேதுபதி!
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டனாக உள்ள முத்துக்குமரன் மேல், போட்டியாளர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
பிக்பாஸ் வீட்டின் 4வது வாரம் இன்றுடன் முடிவடைய உள்ளது. வார இறுதி நாட்களில் போட்டியாளர்களை சந்திக்கும் விஜய் சேதுபதி, இதுவரை வீட்டில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கேள்வி எழுப்பி வருவார். போட்டியாளர்கள் இந்த வாரம் எப்படி செயல்பட்டனர்? விளையாட்டில் அவர்களின் அணுகுமுறை சரியானதா? போட்டியாளர்களிடம் அவர்கள் வெளிப்படுத்தும் வார்த்தைகள் சரியானது தானா ? அவை பார்க்கும் நபர்களால் எப்படி எடுத்துக் கொள்ளப்படும்? பிக்பாஸ் வீட்டில் பாரபட்சம் இருக்கிறதா என்பது குறித்து எல்லாம் விஜய் சேதுபதி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை போட்டியாளர்களை சந்தித்து பேசுவார்.
தாக்கப்பட்டார் கேப்டன் முத்து
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த வார கேப்டனாக இருந்த முத்துக் குமரனை பல்வேறு கேள்விகளைக் கேட்டு தாக்கி இருப்பார். இதுகுறித்த ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
அந்தப் ப்ரோமோவில் விஜய் சேதுபதி, போட்டியாளர்களிடம் எப்படி இருந்தது முத்துக் குமரனின் கேப்டன்சி எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு பதிலளித்த முத்துக் குமரன், என்னைப் பற்றி சக போட்டியாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன் எனக் கூறினார்.
இதைக் கேட்டு கோபமடைந்த விஜய் சேதுபதி, இதைக் கேட்க வேண்டியது என்னுடைய வேலை, அப்படி இருக்கையில், என்னுடைய வேலையை ஏன் நீங்க செஞ்சிங்க என முத்துக் குமரனிடம் முகத்தில் அடித்தாற் போல் கேள்வி எழுப்பினார் விஜய் சேதுபதி.
நேற்றைய தினம் சம்பவம் செய்த முத்து
அத்துடன், நேற்று இரவு ஒன்று செய்தீர்களே அதை ஏன் செய்தீர்கள் என விஜய் சேதுபதி முத்துவிடம் அடுத்த கேள்வியை எழுப்பினார். அப்போது, நான் வீட்டில் உள்ள அனைவரையும் ரொம்ப நேரம் கூப்பிட்டேன். ஆனால், 10 பேர் மட்டும் தான் வந்தார்கள் எனக் கூறுகிறார்.
அந்த சமயத்தில் பேசிய விஜே விஷால், நான் இங்கு யார் இருக்கிறார்களோ, அவர்களை மட்டும் வைத்துக் கொண்டு பேசுகிறேன் என முத்து கூறிவிட்டார். அது எனக்கு மிகவும் கடினமான வார்த்தையாக இருந்தது என தன்பக்க கருத்தை தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய சௌந்தர்யா, முத்துக் குமரன் ஒரே ஒரு வார்த்தையத் தான் விட்டார், ஆனால், அப்போதிலிருந்து முத்துக் குமரன் மேலே இருந்த மொத்த மரியாதையும் போய் விட்டது எனக் கூறியிருப்பார்.
தலையில் கணம்
இவற்றை எல்லாம் கேட்டு வந்த விஜய் சேதுபதி, முத்துக் குமரனுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது, எப்போதும் தலையில் கிரீடம் வைக்கும் போது கொஞ்சம் கணம் ஏறும் தெரியுமா? எனக் கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட பார்வையாளர்கள் விஜய் சேதுபதி பேசியது சரி என்பது போல கைதட்டி உற்சாகப் படுத்தினர்.
இந்த ப்ரோமோவின் மூலம் இத்தனை நாள் அதிகாரத் தோரனையிலும், தன் கருத்துகளையும் திணித்து வந்த முத்துக் குமரனுக்கு இன்று பெருத்த அடி விழுவது நிச்சயம் என்பது மட்டும் தெரிந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்கள்
முன்னதாக வெளியான ப்ரோமோவில், தீபாவளி பண்டிகை முடிந்துள்ள சமயத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு புதிதாக வைல்டு கார்டு திட்டத்தின் மூலம் சில போட்டியாளர்களை அனுப்ப உள்ளதாக விஜய் சேதுபதி கூறியது குறிப்பிடத் தக்கது.
டாபிக்ஸ்