BiggBoss Tamil Season 7 Grand Finale:கானா பாலா - நிக்ஷன் பாடலுடன் தொடங்கிய பிக்பாஸ் ஃபினாலே - கமெண்ட் அடித்த மாஜிக்கள்
கானா பாலா - நிக்ஷன் பாடலுடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி நடைபெற்று வருகிறது.
கானா பாலா - நிக்ஷன் பாடலுடன் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கற்றவை பெற்றவை குறித்து முன்னாள், இந்நாள் போட்டியாளர்களை பேச அழைத்தார், நடிகர் கமல்ஹாசன். அதை அவர்கள் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் தமிழ் 7 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் 23 போட்டியாளர்கள் பங்கெடுத்துள்ளனர். 106 நாட்கள் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் சரியாக 60 கேமராக்கள் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மறைமுகமாகப் பதிவுசெய்தது. அப்படி, போட்டியாளர்கள் ஒவ்வொரு நாளும் செய்த சுவாரஸ்யமான தொகுப்புகளை விஜய் டிவியில் இரவு 9:30 மணிமுதல் 11 மணி வரை ஒளிபரப்புவர். இதனை கோடிக்கணக்கான மக்கள் அனுதினமும் பார்த்துவருகின்றனர். அதனால் டி.ஆர்.பியில் உச்சம் பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது.
இதில் இறுதிப் போட்டியாளர்களாக விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், மாயா, மணிசந்திரா ஆகியோர் உள்ளனர்.
சரியாக இன்று மாலை ஆறு மணிக்கு பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி தொடங்கியது. பிக்பாஸ் சீசன் தமிழ் 7 கிராண்ட் ஃபினாலே நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக கானா பாலா மற்றும் நிக்ஷன் ஆகியோர் இணைந்து பாடினர். அப்போது கூல் சுரேஷ், சரவண விக்ரம், பூர்ணிமா, ரவீனா, ஜோவிகா, அனன்யா, விசித்ரா ஆகிய அனைத்து போட்டியாளர்களின் செயல்பாடுகளை வைத்து சொந்தமாக பாடல் எழுதி, அதைப் பாடி, மேடையில் அரங்கேற்றினர். அப்போது மேடைக்கு வந்த மாஜி போட்டியாளர்கள், கானா பாலா மற்றும் நிக்சனுடன் சேர்ந்து டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.
அப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கற்றதும் பெற்றதும் பற்றி பேசவேண்டும் என முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டார், கமல்ஹாசன்.
அப்போது பேசிய பூர்ணிமா செயல்பாடுகள் தான் நம்மை உயர்த்தும் எனக் கூறினார். இப்போட்டியில் கிடைத்த புகழினால் எங்குசென்றாலும் நல்லவிதமோ, கெட்டவிதமோ தம்மைப்பற்றி பேசுகின்றனர் என்றார், நிக்சன். வினுசா பேசுகையில் நல்லவனாக இருந்தாலும் வல்லவனாக இருக்கவேண்டும் என்பதை தான் பிக்பாஸில் கற்றதாக தெரிவித்தார். அதேபோல், அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்காமலேயே நாம் ஒருவரை பற்றி தவறாக நினைக்கக் கூடாது என்பதை கற்றதாக அனன்யா கூறினார். பிக்பாஸ் பற்றி பேசிய கூல் சுரேஷ், பொறுமையை இருக்கக் கற்றுக்கொண்டேன், பிக்பாஸ் வீடு ஒரு ஜெயில் என கமண்ட் அடித்தார். கானா பாலா பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசுகையில், இந்நிகழ்ச்சிக்குப் பின் கிடைத்த புகழினால் 13 நாடுகளுக்குப் பாட அழைப்பட்டுள்ளேன் எனப் பூரித்தார்.
பின் இந்த கேள்வி இறுதிப்போட்டியாளர்கள் வசமும் கொண்டு செல்லப்பட்டது. பின், அங்கு ஒரு சுயாதீன பேண்ட்டின் ஒரு பாடல் திரையிடப்பட்டு காண்பிக்கப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9