தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Dhanalakshmi: வீட்டை விட்டு துரத்தப்பட்ட பிக் பாஸ் தனலட்சுமி.. பெத்த தாய் வெறுக்க என்ன காரணம்?

Bigg Boss Dhanalakshmi: வீட்டை விட்டு துரத்தப்பட்ட பிக் பாஸ் தனலட்சுமி.. பெத்த தாய் வெறுக்க என்ன காரணம்?

Aarthi Balaji HT Tamil
Jun 01, 2024 09:06 AM IST

Bigg Boss Dhanalakshmi: பிக் பாஸ் மூலம் பிரபலமான தனலட்சுமி தற்போது தன் தாய் தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அதிர்ச்சியான பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

வீட்டை விட்டு துரத்தப்பட்ட பிக் பாஸ் தனலட்சுமி.. பெத்த தாய் வெறுக்க என்ன காரணம்
வீட்டை விட்டு துரத்தப்பட்ட பிக் பாஸ் தனலட்சுமி.. பெத்த தாய் வெறுக்க என்ன காரணம்

ட்ரெண்டிங் செய்திகள்

அவர்களில் ஒருவர் தான் ஈரோட்டைச் சேர்ந்த, தனலட்சுமி. டிக் டாக் செயலி மூலம் சர்ச்சைக்குரியவராக பிரபலமானார். இது தான் அவரை பிக் பாஸ் மேடை வரை அழைத்து சென்றது. 

70 நாட்கள் மேல் நீடித்த போராட்டம்

பல போராட்டங்களை தாண்டி நிகழ்ச்சியில் ஒரு கட்டம் வரை நகர்ந்து வந்தார். இருப்பினும் டைட்டில் பட்டம் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் கிடைத்து இருக்கிறது. கிட்டதட்ட 70 நாட்கள் மேல் வரை நிகழ்ச்சியில் நீடித்தார்.

ஏமாற்றம் தான் மிஞ்சியது

இதனிடையே பிக் பாஸ் சென்றால் வாய்ப்பு நிறைய கிடைக்கும் என நினைத்து சென்ற தனலட்சுமிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை லைம்லைட்டில் இருந்த தனலட்சுமி, அதன் பின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருக்கும் இடமே தெரியாமல் போனார்.

இந்நிலையில் தனலட்சுமி தற்போது தன் தாய் தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக அதிர்ச்சியான பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

மகளுக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்

அவர் வெளியீட்டு இருக்கும் பதிவில், “ இந்த போஸ்ட் என் ஃபாலோயர்கள் மற்றும் நண்பர்களுக்காக மட்டுமே. என் தாய் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைத்து இருக்கிறார்.

எனக்கும், அவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், என் அம்மாவின் புகைப்படத்தை எங்கும்  நான் பயன்படுத்தக் கூடாது என்றும், என் பெயரை பயன்படுத்தாதே என்றும் அதில் தெரிவித்து உள்ளார். அதற்கான காரணங்களை தற்போது ஷேர் செய்ய விரும்பவில்லை “ என குறிப்பிட்டு உள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். மேலும் பெத்த மகளுக்கு எதனால் தாய் இது போன்ற வக்கீல் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கண்ணீர் விட்டு அழும் வீடியோ

முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்பு தனலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து இருந்தார்.

அதில், ‘ஓம் நம்ச்சிவாய’ என்ற ஒற்றை கேப்ஷனுடன் வீடியோ பகிர்ந்துள்ள உள்ளார். அய்ஜில் தனலட்சுமி தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி கொள்ளாத அளவு கதறி அழுது இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், வாழ்க்கையின் முடிவு மரணம் என்ற கேப்ஷன் உடன் தனலட்சுமி இந்த வீடியோவைப் பகிர்ந்து உள்ளார். ஆனால் வீடியோ வெளியிட்ட சில நிமிடங்களிலேயே பின் அந்த வார்த்தைகளை அவர் தூக்கிவிட்டார். அதற்கு பதிலாக தான், ஓம் நமச்சிவாய என கேப்ஷன் போட்டு இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்