Bigg boss Tamil: செளந்தர்யா விவகாரம்.. ‘ஏன் ஒரு ஆம்பள அப்படி சொல்லக்கூடாது? ஒரு தலைபட்சமா என்ன? - தீபக் மனைவி பேட்டி
Bigg boss Tamil: பிக் பாஸ் வீட்டிலும் வெளியிலும் மிகப்பெரிய விவாதமாக மாறியது. ஒரு சிலர் தீபக் செய்தது சரிதான் என்று கூறினாலும், இன்னும் சிலர் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

Bigg boss Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா ஒரு முறை பிங்க் கலரை தொட வேண்டும் என்பதற்காக, அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தீபக் பிங்க் கலர் ஆடையை அணிந்திருந்ததால், அதை தொடும் நோக்கத்தில், தீபக்கை வந்து தொட்டு விட்டுச் சென்றார்.
டென்ஷனான தீபக்
இதில் டென்ஷனான தீபக், என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி என்னை நீ தொடுவாய் என்று கேட்க, சௌந்தர்யா இது மிகவும் இயல்பான விஷயம், இதற்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள் என்று வாதம் செய்தார். ஆனால், தீபக் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை; என் அனுமதி இல்லாமல் என்னை யாரும் தொடக்கூடாது என்று காட்டமாக கூறினார்.
மிகப்பெரிய விவாதமாக மாறியது.
இந்த விவகாரம், பிக் பாஸ் வீட்டிலும் வெளியிலும் மிகப்பெரிய விவாதமாக மாறியது. ஒரு சிலர் தீபக் செய்தது சரிதான் என்று கூறினாலும், இன்னும் சிலர் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தீபக்கின் மனைவி சிவரஞ்சனி கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து பேசினார்.
செளந்தர்யாவை தாக்கிய தீபக் மனைவி
அந்த பேட்டியில் அவர் பேசும்பொழுது,' சௌந்தர்யா விவகாரத்தில் அது அப்படியே தலைகீழாக நடந்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருந்து, ஒரு ஆண் அவரை தொட்டிருந்தால் இப்படியா ரியாக்ட் செய்திருப்பார்கள். நிச்சயம் அவருக்கு ரெட் கார்டை கொடுத்து வெளியே அனுப்பி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
ஏன் ஒரு ஆண்மகனுக்கு உரிமை இல்லையா?
ஒரு பெண்ணுக்கு அப்படியான உரிமை இருக்கும்பொழுது, ஒரு ஆணுக்கும் அதே சம அளவிலான உரிமை இருக்கிறது. ஏன் ஒரு ஆண்மகன் தன்னை தொட வேண்டும் என்றால், அனுமதி கேட்டு விட்டு தான் தொட வேண்டும் என்று சொல்வதற்கு உரிமை கிடையாதா..? இதை சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக எடுத்து தீபக்கை பலரும் கண்டித்தனர்.
ஒரு ஆண்மகன் ஏன் சொல்லக்கூடாது.
விமர்சனம் செய்பவர்களும் தீபக்கை சாடினர். அதை பார்க்கும் பொழுது இவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஏன் இவர்கள் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்கள் என்ற கேள்வி எனக்கு எழுந்தது. என் உடம்பை என்னை கேட்காமல் தொடக்கூடாது என்பதை ஒரு ஆண்மகன் ஏன் சொல்லக்கூடாது.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்