Bigg Boss Sivaranjini: ‘தீபக் பத்தி உங்களுக்கு முழுசா தெரியாம.. அருண் மேல அவ்வளவு கோபம் இருந்துச்சு..’- மனைவி பேட்டி!
Bigg Boss Sivaranjini: நான் உள்ளே சென்று அருணை பார்த்த பொழுது, எனக்கு அவன் மீது இருந்த கோபம் சுத்தமாக போய்விட்டது. இவனிடம் நான் என்ன கேட்க? என்று எனக்கு தோன்றியது. - தீபக் மனைவி பேட்டி

Bigg Boss Sivaranjini: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் கடைசிக்கட்டம் வரை வந்த தீபக் இறுதியில் வெளியேற்றப்பட்டார். இவர் உள்ளே இருந்த போது இவருக்கும் சக போட்டியாளரான அருணுக்கும் இடையே நடந்த சண்டை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
அருண் - தீபக் சண்டை
காரணம், அப்போது அருண் பிரசாத் தீபக்கைப்பார்த்து ‘நான் ஒரு ட்ரெண்டிங் ஹீரோ என்னையே அவர் அப்படி பேசுகிறாரே... அப்படியானால், இவர் ட்ரெண்டிங்கில் இருக்கும் போது அவரது உதவியாளர்களிடம் எப்படி நடந்திருப்பார் என்றார். இதை பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தீபக்கின் மனைவியும் கண்டித்து பேசினார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தீபக்கின் மனைவியான சிவரஞ்சினி தீபக்குடன் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசும் போது, ‘வெளியே தீபக்கும் அருணும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. அப்படி இருக்கும் பொழுது, தீபக்கை பற்றி உங்களுக்கு முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் பிக் பாஸில் நடக்கும் விஷயங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஆனால், அந்த விவகாரத்தில் அருண், நான் ஒரு ட்ரெண்டிங் ஹீரோ... என்னையே அவர் அப்படி பேசுகிறார்.. அப்படியென்றால், அப்படியானால் அவர் ட்ரெண்டிங்கில் இருக்கும் போது அவரது உதவியாளர்களிடம் எப்படி நடந்திருப்பார்? என்றார். இதன் மூலம் அவர் என்ன சொல்ல வர முயற்சிக்கிறார் என்ற எனக்கு கேள்வி எழுந்தது. அது என் மனதிற்குள் இருந்து கொண்டே இருந்தது. நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பொழுது மிகவும் கோபமாக தான் சென்றேன்.
ஆனால் கேட்க தோன்றவில்லை
ஆனால் நான் உள்ளே சென்று அருணை பார்த்த பொழுது, எனக்கு அவன் மீது இருந்த கோபம் சுத்தமாக போய்விட்டது. இவனிடம் நான் என்ன கேட்க? என்று எனக்கு தோன்றியது. அப்போதுதான் நாம் வெளியில் இருந்து பார்ப்பதற்கும் வீட்டிற்குள் சென்று சம்பந்தப்பட்ட நபர்களை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்பதை நான் புரிந்து கொண்டேன்.’ என்றார்.
மனதைக்கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும்
இதனைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த தீபக், ‘பிக் பாஸை பொருத்தவரை அங்கு மனதை எந்த அளவு நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம் அதிலிருந்து வெளிவரும் செயல்களை நாம் எப்படி கட்டுப்பாடோடு வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் அடிப்படை. இது புரிவதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். அன்றைய தினம் அவன் ஏற்கனவே எரிச்சலில் இருக்கிறான் என்பது எனக்கு தெரியாது. அப்போது நான் ஏதோ சொல்ல, அதில் அவன் டென்ஷன் ஆகிவிட்டான். அது அவ்வளவு பெரிய சண்டையாக மாறும் என்று எனக்குத் தெரியாது.’ என்று பேசினார்.

டாபிக்ஸ்