பிக்பாஸ் வீட்டில் ஷாக்.. பிரிச்சு மேய்ந்த சுனிதா.. உள்ள நுழைஞ்சதும் சூடுபிடிக்க ஆரம்பித்த ஆட்டம்..
பிக்பாஸ் வீட்டின் ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க சுனிதாவும், வர்ஷினியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 8 தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் ஆட்டத்தை சூடுபிடிக்க வைக்க பல்வேறு வித்யாசமான டாஸ்குகளை பிக்பாஸ் கொடுத்து வருகிறது.
பிக்பாஸ் வீட்டில் 2 புதிய போட்டியாளர்கள்
அந்தவகையில் சில நாட்களாகவே பிக்பாஸ் வீட்டில் உள்ள 2 பேர் வெளியேற்றப்பட்டு புதிதாக 2 பேர் ரீபிளேஸ் செய்யப்படுவார் என்ற பேச்சுகள் எழுந்த வண்ணமாகவே இருந்தது.
மேலும், அதையொட்டி பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்களில் யார் வந்தால் நன்றாக இருக்கும் யார் வரக்கூடாது என்பது குறித்த விளையாட்டும் நடத்தப்பட்டது.
அதில், பலரும் வர்ஷினி உள்ளே வந்கால் நன்றாக இருக்கும் என்றும் யார் வரவே கூடாது என்றும் போட்டியாளர்கள் கூறினர்.
பிக்பாஸ் எடுத்த முடிவு
அவர்கள் சொன்னதை கேட்ட பிக்பாஸ் இறுதியில் ஒரு முடிவை எடுத்தது. அந்த முடிவின் அடிப்படையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர் வர்ஷினியும் சுனிதாவும்.
பிக்பாஸ் வீட்டிற்கு 2 போட்டியாளர்கள் வருவார்கள் என்பதை அறிவித்த பிக்பாஸ் அது யார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த உடன் டசம்பவத்தை ஆரம்பித்தார் சுனிதா.
வம்பிழுத்த சுனிதா
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே சுனிதாவிற்கும் ஜாக்குலினுக்கும் ஏழாம் பொருத்தம் தான். இதனாலே அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப வேண்டாம் என பலரும் கேட்டனர். சுனிதா பாஸ் மாதிரி நடந்து கொள்கிறார் எனக் கூறியவர்கள், இன்று அவரைக் கண்டதும் அதிர்ச்சி ஆகினர்.
போதாத குறைக்கு அவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உடனே என்ன என்னைப் பார்த்ததும் எல்லாரும் சோகமாகிட்டிங்க என்று கூறிக்கொண்டே ஜாக்குலினை வம்புக்கு இழுக்கிறார்.
ரணகளமான வீடு
இந்த வீட்டில் ஒரு துணை தேவைப்படுது என்றால் அது உனக்கு தான். நீ தான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருடன் இருக்க என்றார். அடுத்ததாக சௌந்தர்யாவிடம் வந்த அவர் நீ என்ன கேம் விளையாடுற. எது சொன்னாலும் மூஞ்சிய தொஙக போடுற என்றும் விஷாலை முக்கோன காதல் கதை ட்ரை பண்றியா என கிண்டல் அடித்துள்ளார். இதுதொடர்பான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
பரபரப்பில் பிக்பாஸ் வீடு
இதனால், தற்போது பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாளே டாஸ்கில் போட்டியாளர்கள் தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நிலையில், வீட்டிற்குள் புதிதாக வந்த போட்டியாளர்கள் என்ன செய்ய போகிறார்கள், வீட்டிற்குள் இருப்பவர்கள் என்ன செய்ய போகிறார்கள், பணப் பெட்டியை எடுக்க போவது யார் என்ற கேள்வி எல்லாம் தற்போது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்