'அது எப்டி பாஸ் மூஞ்ச பாத்தா தெரியும்' சவுண்டை ரவுண்டு கட்டிய மஞ்சரி குடும்பம்.. ஆஃப் ஆன விஷால்..
மஞ்சரியின் முகத்தை பார்த்தால் பொய் சொல்வது தெரியுது என சௌந்தர்யா பேசியது குறித்து மஞ்சரி குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது டாஸ்க் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது freezing task நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் அவர்களை சர்ப்ரைஸாக சந்தித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மஞ்சரி குடும்பம்
அந்த டாஸ்க்கின் படி, பிக்பாஸ் வீட்டிற்குள் மஞ்சரியின் குடும்பத்தினர் வந்துள்ளனர். மஞ்சரியின் அம்மா, அவரது மகன், சகோதரி, அவரது கணவர் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
அப்போது, மஞ்சரியை தெரியாத பிக்பாஸ் போட்டியாளர்கள் நெகட்டிவ், பொய்க்காரி என தொடர்ந்து கூறி அழ வைத்தனர். அதுகுறித்து பேசி மஞ்சரியின் அம்மா கண் கலங்கினார்.
சௌந்தர்யாவை நோக்கி பாய்ந்த கேள்வி
பின்னர் அவரது அக்கா நேரடியாக சௌந்தர்யாவிடமே சில கேள்விகளை முன்வைத்தார். நீங்க விஷால்கிட்ட பேசிட்டு இருக்கும் போது சொன்னீங்க. என்னால முகத்த பாத்தே சொல்ல முடியும். அன்ஷிதா பொய் சொல்ல மாட்டா. ஆனா இந்த மஞ்சரி நிச்சயம் பொய் சொல்லுவான்னு சொன்னீங்க. அத எப்படி சொன்னீங்க எனக் கேட்டார்.
அப்போது குறுக்கிட்ட மஞ்சரியின் அம்மா, எனக்கு முகத்த பாத்தாலே தெரியும் டா. மஞ்சரியும் ஜாக்குலினும் தான் பொய் சொல்லுவாங்கன்னு எப்படி சொல்றீங்க எனக் கேட்டார்.
இந்த வார்த்தையை கேட்டதும் அதிர்ச்சியான ஜாக்குலின், சிரித்துக் கொண்டே சௌந்தர்யாவை பார்த்து தலையை மட்டும் அசைத்தார். அப்போது, வீட்டிலுள்ள மொத்த போட்டியாளர்களும் சௌந்தர்யாவைப் பார்த்து கைதட்டி சிரித்தனர். அப்போது சௌந்தர்யா என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றார்.
விஷாலை முடித்து விட்ட வார்த்தை
பின் பேசிய மஞ்சரியின் மாமா, விஷாலை ஒரே டயலாக்கில் முடித்து விட்டார். விஷால் பிக்பாஸ் வீட்டில் தன்னை என்டெர்டெயினராக காட்டிக் கொன்டு வருகிறார். ஆனால், அவர் மனதில் யாரோ நான் தான் டாக்டர் என பதிய வச்சிட்டாங்க. அவரு என்டர்டெயினர்ன்னு வெளிய சுத்தமா தெரியல என விஷாலின் சோலியை முடித்து விட்டுவிட்டார். மேலும், பவித்ரா கடந்த வாரம் சிறப்பாக விளையாடியதாக கூறினார். தொடர்ந்து ஜாக்குலின் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு விதமாக இருப்பதாக கூறினார்.
முத்துக்குமரனுக்கு நன்றி
முத்துக்குமரனுக்கு அவரது வட்டார வழக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுது. ஒருத்தர குறை சொன்னாலும் அது பெருசா காயப்படாம சொல்றாரு என்றார்.
மஞ்சரியை பற்றி பேசும் போது, அவர் இவ்வளவு உடல் பலத்தை பயன்படுத்தி விளையாடுவார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. பொம்மை டாஸ்க்குக்கு அப்புறம் தான் நான் பிக்பாஸை பாக்க ஆரம்பிச்சேன். மஞ்சரிகிட்ட ஒரு நல்ல முகமும் இருக்கு. அத முதல் முதல்ல வெளிய கொண்டு வந்தது முத்துக்குமரன் தான். அவருக்கு நன்றி சொல்லிக்குறேன் என்றார்.
ஏன்னா நீ என் அம்மா
பின் மஞ்சரி, தன் மகனிடம் டெவில் டாஸ்கில் என்னை பார்த்து பயமா இருந்ததா எனக் கேட்டார். அதற்கு இல்லை. ஏன்னா நீ என் அம்மா எனக் கூறினார். அதைக் கேட்ட உடனே மஞ்சரி அவனை அணைத்து முத்தமிட்டாள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்