ராணவ்வை துறத்தும் சந்தேகக் கண்கள்.. விடாப்பிடியாக இருக்கும் முத்து, ஜாக்குலின்.. என்ன தான் ஆச்சு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ராணவ்வை துறத்தும் சந்தேகக் கண்கள்.. விடாப்பிடியாக இருக்கும் முத்து, ஜாக்குலின்.. என்ன தான் ஆச்சு?

ராணவ்வை துறத்தும் சந்தேகக் கண்கள்.. விடாப்பிடியாக இருக்கும் முத்து, ஜாக்குலின்.. என்ன தான் ஆச்சு?

Malavica Natarajan HT Tamil
Dec 30, 2024 12:22 PM IST

பிக்பாஸ் வீட்டில் ராணவ் கை உடைந்தது போல் நடிக்கிறார் என்ற பேச்சுகள் ஒரு வாரம் கடந்தும் எழுந்து வருகிறது. பலரும் ராணவ்வை சந்தேகக் கண்ணோடு பார்த்து வருகின்றனர்.

ராணவ்வை துறத்தும் சந்தேகக் கண்கள்.. விடாப்பிடியாக இருக்கும் முத்து, ஜாக்குலின்.. என்ன தான் ஆச்சு?
ராணவ்வை துறத்தும் சந்தேகக் கண்கள்.. விடாப்பிடியாக இருக்கும் முத்து, ஜாக்குலின்.. என்ன தான் ஆச்சு?

இருப்பினும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான அன்ஷிதா, சௌந்தர்யா, ஜெஃப்ரி போன்றோர் விளையாட்டில் ராணவ் தனியாக தெரியவேண்டும் என்பதற்காக நடித்து வருகிறார்எனகூறிவந்தனர்

ராணவ்வை நம்பாத போட்டியாளர்கள்

இருப்பினும் ராணவ் தொடர்ந்து வலியால் துடித்து வந்ததை கவனித்த அருண் அவரை பிக்பாஸிடம் அழைத்துச் சென்றார். அந்த சமயத்திலும், அன்ஷிதா போட்டியை திசைத்திருப்ப ராணவ் நடிப்பதாகவும், வலது பக்கம் திரும்பி விழுந்த ராணவ்விற்கு எப்படி இடது பக்கம் வலி வரும் என ஜெஃப்ரியும் கூறி வந்தனர்.

அந்த சமயத்தில் பேசிய பிக்பாஸ், ராணவ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பின் கையில் கட்டோடு பிக்பாஸ் வீட்டிற்குள் திரும்பி வந்த ராணவ்விடம் அன்ஷிதா மன்னிப்பு கேட்டார். ஆனால், சௌந்தர்யா ராணவ் மீது தான் தவறு என்பதை கூறி அவரிடம் சண்டைக்குநின்றார்.

ராணவ்விற்கு ஓய்வு

இதற்கிடையில், பிக்பாஸ் ஆக்டிவிட்டி டாஸ்க்கில் இருந்து ராணவ்விற்கு 3 வாரம் ஓய்வு அளித்து அறிவித்தார். ஆனாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ராணவ்வை சந்தேகத்துடன் பார்த்து வருவதை அறிந்த விஜய் சேதுபதி ராணவ்விடமே கையில் அடிபட்டது பற்றி விசாரித்தார்.

இடது கையில் அடிபட்டு கட்டு போட்டிருக்கும் போது எப்படி அவரால் கையை அசைத்தும், ஒரு பக்கமாக சாய்ந்தும் தூங்க முடிகிறது என பலரும் கேட்டனர். அதற்கும் ராணவ் பதிலளித்து விட்டார்.

மீண்டும் வந்த சந்தேகப் பார்வை

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ராணவ்வும் விஜே விஷாலும் ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது விஜே விஷால் ராணவ்வின் அடிபட்ட கையிலே படுத்திருந்தார். அதுமட்டுமின்றி, கையின் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்ட பொருளை தூங்கும் போது வரும் வெளிச்சத்தை மறைக்கும் பொருளாக பயன்படுத்தி உள்ளார். இதை கவனித்த முத்துக் குமரன், ஜாக்குலினையும் மஞ்சரியையும் அழைத்துக் காட்டி புலம்பி உள்ளார்.

நக்கலாக பேசும் முத்துக் குமரன்

அடிபட்ட கையை வைத்துக் கொண்டு இப்படி படுத்துத் தூங்கினால் அவரை யார் நம்புவார்கள். அதுவும் வெளிச்சத்தை மறைக்க இப்படி எல்லாம் செய்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அப்போது, மஞ்சரி நேராக ராணவ்வும் விஜே விஷாலும் தூங்கும் இடத்திற்கே சென்று ராணவ்வை எழுப்புகிறார். அந்த சமயத்தில் முத்துக் குமரன் நக்கலாக தான் கேட்க நினைத்ததை எல்லாம் கேட்கிறார். அப்படி செய்யும் ராணவ்வை எதைக் கொண்டு அடிப்பது என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த காட்சிகள் காட்டப்படவில்லை. மாறாக பிக்பாஸ் 24X7 லைவ் பார்த்துக் கொண்டிருப்போர் இந்த வீடியோவை ஷேர் செய்து ராணவ்வை கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால், ராணவ் அடிபட்டது போல் நடிக்கிறார் என்ற பேச்சு மீண்டும் எழுந்து வருகிறது.

அப்படி என்ன வன்மம்

முன்னதாக், என் அண்ணன் அடிபட்டு வலியில் துடிக்கும் போது எப்படி உங்களால் அவன் நடிக்கிறான் என சொல்ல முடிந்தது. அப்படி என்ன என் அண்ணன் மீது உங்களுக்கு வன்மம் என ராணவ்வின் தங்கை சௌந்தர்யாவை பார்த்து கேள்வி எழுப்பினார்.

மேலும், இத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு என் பிள்ளை விளையாடுகிறான் என ராணவ்வின் அம்மா அப்பா அவரை பெருமையாக பேசினாலும் அவரின் நிலையை நினைத்து கண்ணீர் சிந்தினர்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோள் பட்டை வலியால் துடித்த நிலையில், அவரது பெற்றோர், ராணவ்வை நிகழ்ச்சியில் இருந்து வீட்டிற்கு அனுப்பி விடுமாறும், தங்கள் பிள்ளை வலியால் துடிப்பதை தங்களால் காண முடியவில்லை என்றும் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகிவருகிறது

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.