பிக்பாஸ் வீட்டில் குறிவைக்கப்பட்ட சௌந்தர்யா.. பி.ஆர். டீமால் வந்த செக்.. கண்கலங்கி விளக்கம்..
பி.ஆர் டீமின் உதவியால் தான் சௌந்தர்யா பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களை கடந்து இருக்கிறார் என்ற போட்டியாளர்களின் குற்றச்சாட்டுக்கு சௌந்தர்யா கண்கலங்கி பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்களை 100 நாட்கள் தக்க வைத்துக் கொள்ள பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அவர்களின் வெற்றிக்காக ஒவ்வொரு வாரமும் பல போட்டியாளர்களை நாமினேட் செய்து, அவர்களை தங்கள் திறமையாளும், தந்திரத்தாலும் வெளியேற்றி வருகின்றனர்.
பொறாமை பட வைத்த சௌந்தர்யா
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் நடந்த freeze task மூலம் போட்டியாளர்கள் அனைவரையும் பொறாமை பட வைத்தவர் சௌந்தர்யா தான். மஞ்சரி, ராணவ் போன்ற சில போட்டியாளர்களின் குடும்பத்தினர் சௌந்தர்யாவை கேள்வி கேட்டாலும், பலரது மனங்களில் ஃபேவரைட்டாக இருந்தவர் சௌந்தர்யா தான். அவரை பிக்பாஸ் வீட்டில் ஏஞ்சல் என்றெல்லாம் சொல்லி மற்றவர்களை பொறாமை படவும் செய்தனர்.
பி.ஆர்.டீமால் தப்பிக்கும் சௌந்தர்யா
நிலைமை இப்படி இருக்க, சௌந்தர்யாவின் பி.ஆர்.டீமால் தான் அவர் இத்தனை நாள் இந்த வீட்டில் தப்பித்து வருகிறார். அவர் தன்னை கேமரா முன் நன்றாக ப்ரொஜெக்ட் செய்து கொள்கிறார். பல தவறுகள் செய்தாலும் சின்ன சின்ன ரியாக்ஷன் மூலம் மக்களை கவர்வது எப்படி என்பது அவருக்கு தெரிந்துள்ளதாகவும் கூறி பவித்ரா, ஜாக்குலின், முத்துக்குமரன் போன்றோர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். இதற்கான ப்ரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டது.
வாய்ப்பை தரும் பிக்பாஸ்
இந்நிலையில், தன் மீதான மற்றும் தன் பி.ஆர். டீம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாத சௌந்தர்யா கண்கலங்கி நிற்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ள வரவங்க எதாவது சாதிச்சிட்டு வந்திருப்பாங்க. இல்ல ஒன்னு ரெண்டு சீரியலோ, படமோ நடிச்சிட்டு உள்ள வந்துருப்பாங்க. இல்ல பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்ததுக்கு அப்புறம் பெருசா வாய்ப்பு வரும்ன்னு இருக்காங்க.
ஃபேன்ஸ் தான் பி.ஆர்.டீம்
இங்க நிறைய பேர் மக்கள் மத்தியில் பழக்கம் ஆனவங்க. இங்க சீரியல் பண்ண நிறைய பேருக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அப்போ அவங்களும் ஒரு பி.ஆர். டீம் மாதிரி தான.
என்ன பொருத்த வரைக்கும் பி.ஆர்.டீம்ன்னா என்னோட ஃபேன்ஸ். பி.ஆர். டீம் வச்சதுனால மட்டும் எனக்கு யாரும் ஓட்டு போடப் போறது கிடையாது. கடைசி நேரத்துல போன் எடுத்து ஓட்டு போடுறது மக்கள். அவங்க நினைக்குறவங்களுக்கு தான் ஓட்டும் வரும்.
மக்களுக்கு பிடிக்கணும்
பிக்பாஸ் வீட்ல இந்த இடத்துக்கு வர்றது அவ்ளோ ஈஸி இல்ல. நீங்க சொல்றது எனக்கு கஷ்டமா இருந்தாலும், நான் எதாவது பண்ணுனதுனால தான் நான் இந்த வீட்ல இருக்கேன்.
நான் எல்லா வாரமும் நாமினேட் ஆகல. ஏதோ ஒருவகையில நான் அவங்க மனசுல புகுந்திருக்கேன். இந்த விஷயத்த நான் freeze taskல தான் பாத்தேன். நான் பண்றது தாப்பாகவோ இல்ல எரிச்சல் தர மாதிரியா உங்களுக்கு எல்லாம் தெரிஞ்சா கூட மக்களுக்கு அது பிடிக்கனும்.
நான் மட்டும் பி.ஆர்.டீம் வைக்கல
நான் பிக்பாஸ் வீட்ல வந்து ஜெயிச்சிட்டேன். நாம எல்லாரும் ஒரு இடத்துக்கு போகனும்ன்னா ஒரு உந்துதல் தேவ. அதை எப்படி வேணாலும் எடுத்துக்கலாம். மக்கள் மனசுல இடம் பிடிக்க எல்லாரும் சில வேலை செய்ய தான் செய்வாங்க.
இந்த வீட்ல இருக்க பல பேர் பி.ஆர்.டீம் வச்சிருக்கலாம். எனக்கு எல்லாரும் கை தட்றாங்க. எல்லா வாரமும் நான் எலிமினேட் ஆகாம காப்பாத்தப் படுறேங்குறதுக்காக மட்டும் என்னோட பி.ஆர். டீம் பத்தி இங்க பேச முடியாது. அதுமட்டுமில்லாம நான் எதுவுமே பண்ணாம பி.ஆர்.டீம் வச்சாலும் அது யூஸ் இல்ல. நாம என்ன பண்றோம்ங்குறது முக்கியம்" என பேசி தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.
டாபிக்ஸ்