பிக்பாஸ் வீட்டிற்குள் துடித்த ராணவ்.. கட்டு போட்டு அனுப்பிய பிக்பாஸ்.. என்னதான் ஆச்சு?
பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை விளையாடிக் கொண்டிருந்த ராணவ், அடிபட்டு வலியால் துடித்து கையில் கட்டுடன் வீட்டிற்குள் வந்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது.
72வது நாளில் ராணவ்விற்கு வந்த வினை
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டின் 72வது நாளான இன்று போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை விளையாடி வந்தனர். அப்போது, ஜெஃப்ரி ராணவ்வை கீழே தள்ளி அழுத்தியுள்ளார். இதில், ராணவ்விற்கு தோள்பட்டையில் அடிபட்டு வலியால் துடித்துள்ளார்.
இருப்பினும், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களான அன்ஷிதா, சௌந்தர்யா, ஜெஃப்ரி போன்றோர் விளையாட்டில் ராணவ் தனியாக தெரியவேண்டும் என்பதற்காக நடித்து வருகிறார் என கூறிவந்தனர்.
