Bigg Boss Ankita: 19 வயதில் வாய்ப்பு.. படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்தார்கள்.. பிக்பாஸ் நடிகை கூறிய அதிர்ச்சி சம்பவம்
Actress Ankita Lokhande: சினிமா நடிக்க எனக்கு 19 வயதில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் அந்த படத்தில் நடிக்க என்னை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார்கள். முடியாது என மறுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியே வந்து விட்டேன் என பிக்பாஸ் பிரபலம் நடிகை அங்கிதா லோகேந்தே தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் சினிமா மிகப்பெரிய துறையாக விளங்கி வருகின்றது. அப்போது தொடங்கி இப்போது வரை பெண்கள் நடிக்க வர வேண்டும் என்றால் பல்வேறு விதமான இன்னல்களை சந்திப்பதாக பல நடிகைகள் கூறி நாம் கேட்டதுண்டு.
தற்போது வரையும் அது தொடர்ந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சினிமாவில் முன்னேற வேண்டுமென நினைக்கக்கூடியவர்கள், அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என நினைக்கக்கூடிய பல நடிகர்கள் இதில் கலந்துகொண்டு பல புதிய வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.
சினிமாவில் இருக்கக்கூடிய உச்ச நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் நாகார்ஜுனா, ஹிந்தியில் சல்மான் கான் என உச்ச நடிகர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
ஹிந்தியில் 17வது சீசன் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. இதில் பலர் கலந்து கொண்டாலும் நடிகை அங்கிதா லோகேந்தே மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்த சீசனில் தனது கணவர் விக்கி ஜெயினோடு அவர் கலந்து கொண்டார் என்பது முக்கியமாகும்.
சமீபத்தில் தனக்கு சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை அங்கிதா லோகேந்தே பேட்டி ஒன்று கூறினார்.
அதில் அவர், " எனக்கு 19 வயது இருக்கும் பொழுது பல்வேறு விதமான மோசமான அனுபவங்களை பட வாய்ப்புக்காக எதிர்கொண்டு இருக்கின்றேன். தென்னிந்திய படம் ஒன்று நடிகர்களுக்கான ஆடிஷன் நடத்தியது. அப்போது அதில் நான் கலந்து கொண்டேன். ஒரு சில நாட்களில் எனக்கு அந்த திரைப்படத்தின் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் இந்த திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டீர்கள் உடனே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என அழைத்தனர்.
எனக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. அதே சமயம் உடனே என்னை எப்படி இவர்கள் தேர்ந்தெடுத்தார்கள் என்ற ஆச்சரியமும் இருந்தது. உடனே நான் அங்கு சென்றேன். எனக்கு துணையாக வந்தவரை வெளியே நிற்க சொல்லிவிட்டு என்னை மட்டும் உள்ளே அழைத்தார்கள்.
உள்ளே சென்றதும் நீங்கள் தயாரிப்பாளரோடு படுக்கை அறையில் அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே இந்த பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் என கூறினார்கள். 19 வயது பெண்ணுக்கு இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும் என நீங்கள் நினைத்து பாருங்கள்.
உடனே உங்கள் தயாரிப்பாளருக்கு நடிப்பதற்கு தான் ஆள் தேவை என நான் நினைத்தேன் ஆனால் அவர் படுக்கை அறைக்கு அழைப்பதற்காக கேட்பார் என நினைக்கவில்லை அதற்கு சரியான ஆள் நான் கிடையாது எனக் கூறிவிட்டு வெளியே வந்து விட்டேன். இது போன்ற சூழ்நிலையை நான் அதிக முறை எதிர்கொண்டு விட்டேன் இது மிகவும் வருத்தமான சம்பவம்.” என தெரிவித்துள்ளார்.
தற்போது ஹிந்தியில் வெளியாகும் பல முக்கிய திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். பல முக்கிய வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய பிரபலமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு
இது எங்கள் சொந்த கருத்து கிடையாது.பொது ஊடகத்தில் அவர் அளித்த பேட்டியை வைத்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9