Bigg Boss Ayesha: காமெடி த்ரில்லர் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் ஆயிஷா.. யார் ஹீரோ?
Bigg Boss Ayesha: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஆயிஷா, தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் படத்தில் நடிகர் கணேஷ் சரவணன் ஹீரோவாக நடிக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரபலங்கள் பலரும் தற்போது தமிழ் சினிமாவிலும் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சீரியல் நடிகையான ஆயிஷா தற்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ரொமண்டிக் காமெடி த்ரில்லர் கதை
இரும்புத்திரை, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன், ஆயிஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படம் மூலம் இவர் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
காதலர்கள் பிரிந்த நிலையில் இருவரும் வேறொருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். எதிர்பாராத விதமாக மீண்டும் அவர்களுக்கு இடையே தொடர்பு ஏற்பட, சென்னையில் உள்ள ஒரு பகுதியில் வைத்து சந்திக்க திட்டமிடுகிறார்கள்.
இந்த சந்திப்பின்போது இருவரும் அறை ஒன்றினுள் ஒன்றாக மாட்டிக்கொள்கிறார்கள். அந்த அறையின் கதவு திறக்கப்பட்டால் வெளியே இருவரின் ஜோடிகள், பேமிலி, நண்பர்கள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் முன்னாள் காதலர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை ரெமாண்டிக் காமெடி த்ரில்லர் பாணி கதையம்சத்தில் படம் உருவாக்கப்பட உள்ளது. அறிமுக இயக்குநர் ஜாஃபர் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தில் மறைந்த நடிகர் ரகுவரன் சகோதரர் ராமேஷ், நடிகர் புகழ் உள்பட பலரும் நடிக்கிறார்ர்கள். படத்தில் கணேஷ் மற்றும் ஆயிஷா ஆகியோர் கணவன் மனைவியாக நடிக்கிறார்களாம்.
மனைவிக்கு பயப்படும் 90ஸ் கணவன்
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படம் குறித்து இயக்குநர் ஜாஃபர் கூறும்போது, "நானும், நடிகர் கணேஷும் நண்பர்கள். எனவே அவரிடம் சில கதைகளில் கூறினேன். அவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு காமெடி பாணி கதை தான் சரியாக இருக்கும் என இந்த படத்தை தேர்வு செய்துள்ளோம்.
படத்தில் அவரது கதாபாத்திரம் அடுத்த வீட்டு பையன் போல் அமைந்திருக்கும். மனைவிக்கு பயப்படும் 90ஸ் கிட் கணவராக வருகிறார். நடிகர் மணிகண்டன் தற்போது நடித்திருக்கும் குடும்பஸ்தான் பட கதாபாத்திரம் போல் இவரது கேரக்டரும் இருக்கும்.
இந்த மாதத்தில் இறுதியில் படத்தின் படிப்பிடிப்பு தொடங்கும். எட்டு ஆண்டுகளாக இயக்குநராக ஆக முயற்சித்து வருகிறேன். நான் மீடியாக்களில் பணிபுரிந்துள்ளேன். எனவே பல்வேறு நடிகர்கள் சந்தித்துள்ளேன். அப்போது பல விஷங்களை கற்றுக்கொண்டுள்ளேன். இந்த அனுபவத்தால் படத்தை உருவாக்குகிறேன்" என்றார்.
பிக் பாஸ் ஆயிஷா திரைப்பயணம்
2017இல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ என்ற ரியலிட்டி ஷோ மூலம் டிவியில் அறிமுகமானார். இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமானார்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பான உப்பு புளி காரம் என்ற சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஆயிஷா. தற்போது தாரா என்ற சீரிஸில் நடித்து வருகிறார். அத்துடன் டாக்டர். பென்னட் என்ற மலையாள படத்திலும் நடிக்கிறார். இதையடுத்து தற்போது தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்