Archana Bigg Boss: என் ஹீரோ.. இறுதியாக சீரியல் நடிகருடன் காதலில் விழுந்த அர்ச்சனா
Bigg Boss Archana: சமீபத்தில் அருண் பிரசாத் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியீட்டு இருந்தார். அதற்கு அர்ச்சனா பதிவு செய்த கமெண்ட் தான் இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அர்ச்சனா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசனில் கலந்து கொண்டு, அதன் டைட்டில் வின்னராக மாறியவர் அர்ச்சனா. வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் தட்டிச்சென்றவர் என்ற பெருமை அர்ச்சனாவை சேரும்.
25 வயதான அர்ச்சனா ரவிச்சந்திரன், டைனமிக் என்ற நிகழ்ச்சியில் சன் டிவியில் வீடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கினார். அவர் தனது துடிப்பான ஆளுமையை அதில் வெளிப்படுத்தினார். அதனால் ரசிகர்கள் அவரை விரும்ப ஆரம்பித்தார்கள்.
அவரது ஆரம்ப நாட்களில், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அடுத்த கட்டமாக அவர் குறிப்பாக ' ராஜா ராணி 2 ' இல் பங்கேற்றார். விஜய் டெலிவிஷனின் ' முரட்டு சிங்கிள்ஸ் ' நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கிய காரணத்தினால் அவரது பன்முகத் திறன் பிரகாசித்தது.