எப்பாடி எப்பா! சம்பந்தி பிரச்சனை, முட்டை பிரச்சனை.. முடியல! இன்னைக்கும் பிக்பாஸ் வீட்டிலிருந்து கேட்ட அழுகுரல்
பிக்பாஸ் வீட்டில் தர்ஷா ஏற்படுத்திய முட்டை பிரச்சனையையும், சாச்சனாவின் சம்பந்தி பிரச்சனையையும் பற்றி பேசி இன்று பஞ்சாயத்து செய்கிறார் தொகுப்பாளர் விஜய் சேதுபதி.
பிக்பாஸ் சீசன் 8 தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே பஞ்சாயத்துக்கு பஞ்சமில்லாமல் இருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 2வது வாரத்தை நிறைவு செய்ய உள்ளது.
கண்டித்த விஜய் சேதுபதி
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வீட்டில் நடந்த அனைத்து விஷயங்களையும் கவனித்து வந்த விஜய் சேதுபதி, போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து செய்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் போட்டியாளர்கள் விளையாடாமல் சாப்பிட்டு தூங்கிக் கொண்டிருந்தனர் என விஜய் சேதுபதி காட்டமாகவே விமர்சித்திருந்தார். மேலும், இங்குள்ள போட்டியாளர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தாமலே இருக்கின்றனர். அவர்கள் ஒருவர் முதுகிற்கு பின் மற்றொருவர் என ஒழிந்து கொள்ள நினைக்கின்றனர் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
கட்டம் கட்டிய போட்டியாளர்கள்
இந்நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் ஆட்டத்தை ஆரம்பித்தனர். 2ம் வாரத்தில் பெண்கள் அணியிலிருந்து ஆண்கள் அணிக்கு மாறிய தர்ஷா அங்குள்ளவர்களை வைத்து செய்து கொண்டிருந்தார். முத்து, ரவீந்தர் இல்லாத இடத்தை பூர்த்தி செய்து வந்துள்ளார். இதுவரை இருந்த இடமே தெரியாமல் இருந்த சத்யா தற்போது வீட்டின் கேப்டன் ஆகி உள்ளார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியை கவனித்தால், கிங் டிவி, குயின் டிவி நிகழ்ச்சிகளில் போட்டியாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திய அர்னவ், தர்ஷாவுடன் ரொமான்ஸ் செய்து வந்தார். மேலும், ஆண்கள் அணியின் விதிகளை மீறி தர்ஷாவிடம் நெருங்கியும் பழகி வந்துள்ளார். இது ஆண்கள் அணியை கொதிப்படைய செய்தது.
பஞ்சாயத்து பட்டியல்
பின்னர், முட்டை சண்டை, அன்ஷிதா மற்றும் அர்ணவின் சொம்பு தூக்கி சண்டை, அன்ஷிதா செய்த சமையலை திட்டமிட்டே சாச்சனாவிற்கு தரவில்லை எனக் கூறி சண்டை, பொருளை மறைத்து திருடிவிட்டு, ஜெஃப்ரி மீது புகாரைத் திருப்பி விடுவது என ஏகப்பட்ட பஞ்சாயத்து வீட்டிற்குள் நடந்து முடிந்துள்ளது. அதிலும், வீட்டில் உள்ள 17 பேரில் 10 பேர் நாமினேஷன் லிஸ்டில் வந்துள்ளனர்,
போட்டியாளர்களுக்கு பாராட்டு
இதையடுத்து, இன்றைய எபிசோடில், பேசவுள்ள விஜய் சேதுபதி என்னென்ன செய்வார் என்பதைக் காண அனைவரும் ஆர்வமாக இருந்த நிலையில், விஜய் சேதுபதி போட்டியாளர்களை பாராட்டிய வீடியோவை வெளியிட்டது விஜய் டிவி. கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரத்தில் போட்டியாளர்களின் தீவிரம் அதிகரித்துள்ளது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருக்க இதுமட்டும் போதாது என விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.
மீண்டும் அழுகை
தொடர்ந்து வெளியான அடுத்தடுத்த ப்ரோமோக்களில் விஜய் சேதுபதி தர்ஷா ஏற்படுத்திய முட்டை சண்டையையும், அன்ஷிதா மற்றும் சாச்சனாவிற்குள் நடந்த சம்பந்தம் சண்டையையும் பற்றி விசாரிக்கிறார். ஆனால், கேள்வி எழுப்பிய உடனே சாச்சனா அழத் தொடங்குகிறார். சாப்பாட்டை திரும்ப திரும்ப கேட்பது ஒரு மாதிரி உள்ளதாக் கூறி அழுகிறார்.
இதனால், கடுப்பான மக்கள் எத்தனை வீடியோவைத் தான் அழுவது போன்ற வெளியிடுவார்கள் என சலித்துக் கொள்கின்றனர்.
என்ன செய்யப் போகிறது பிக்பாஸ்?
அதுமட்டுமல்லாமல், டிஆர்பி ரேட்டிங்கில் அதள பாதாளத்திற்கு சென்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை இனியாவது சரியான முறையில் கையாண்டு விஜய் சேதுபதி காப்பாற்ற வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
அதற்கு தகுந்தாற்போல, இன்று மற்றும் நாளை வெளியாகும் நிகழ்ச்சிகளில் ஏதேனும் முக்கிய மாற்றத்தையோ அல்லது, போட்டியாளர்களுக்கு அறிவுரையோ வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்