Amir Pavani: ‘இவள அதுக்காக காதலிக்கிறேன்னு சொன்னாங்க.. அவளுக்கு முதல் கணவரோட..’ - அமீர் ஓப்பன் டாக்!
என்னுடைய அம்மாவை பார்த்து, அவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்துதான் எனக்கு அந்த ஆசையே வந்தது. ஆனால் என்னுடைய வாழ்க்கையை பொருத்தவரை என்னுடைய முதல் திருமண வாழ்க்கை அப்படி ஆன பின்னர் ஒருவேளை நான் அப்படியான அதிர்ஷ்டத்தை பெறாதவளோ என்று நினைத்திருக்கிறேன்.
பிக் பாஸ் சீசன் 5 மூலம் பாவனி ரெட்டி மற்றும் அமீர் நட்சத்திர ஜோடிகளாக மாறினர். அமீரின் காதலை பிபி ஜோடிகள் நிகழ்ச்சி நடைபெறும் போது ஏற்றுக் கொண்டார் பாவனி.
இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். பாவனி, அமீரை விட வயதில் மூத்தவர். இருந்தாலும் வயது காதலுக்கு தடை இல்லை என சொல்லி காதலித்து வருகிறார்கள்.
திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் இவர்கள் வசித்து வருவது சர்ச்சையாக பேசப்பட்டாலும் அதை எல்லாம் இவர்கள் இருவரும் சற்றும் கண்டு கொள்வது இல்லை. நீண்ட நாட்களாக காதலித்து வந்து கொண்டிருக்கும் அவர்களிடம் எப்போது கல்யாணம் என்ற கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. அதற்கு அவர்கள் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பதில் கூறி இருக்கின்றனர்.
பாவனி பேசும் போது, “எனக்கு முதல் கணவர் இறந்த போது என்னை நான் மிகவும் அதிர்ஷ்டம் இல்லாதவளாக நினைத்துக் கொண்டிருந்தேன். சின்ன வயதில் இருந்து என்ன ஆக வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் ஒரு குடும்பத் தலைவியாக வேண்டும் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தேன்.
என்னுடைய அம்மாவை பார்த்து, அவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்துதான் எனக்கு அந்த ஆசையே வந்தது. ஆனால் என்னுடைய வாழ்க்கையை பொருத்தவரை என்னுடைய முதல் திருமண வாழ்க்கை அப்படி ஆன பின்னர் ஒருவேளை நான் அப்படியான அதிர்ஷ்டத்தை பெறாதவளோ என்று நினைத்திருக்கிறேன்.
எவ்வளவுதான் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு ஒரு குடும்பம் என்பது வேண்டும். இப்போது நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். காரணம் என்னுடைய வாழ்க்கையானது முற்றிலுமாக மாறி இருக்கிறது” என்று பேசினார்
அமீர் பேசு போது, “எனக்கும் அவளுக்கும் சண்டை வரும் பொழுது நான் அப்படியே அமைதியாக டிவி பார்க்க ஆரம்பித்து விடுவேன். அவள் கத்திக் கொண்டே இருப்பாள். எல்லாம் முடிந்த பின்னர் இவ்வளவு பெரிய சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி, என்னை கட்டி அணைத்துக் கொண்டு அழுவாள்
அதேபோல இரவில் அவள் சண்டை போட ஆரம்பித்த பின்னர், நான் அப்படியே சென்று படுக்கச் சென்று விடுவேன். இன்னும் சொல்லப்போனால் தூங்கி விடுவேன். அப்போது பாவனி இவ்வளவு பெரிய சண்டை போட்டுக் கொண்டிருக்கிறேன், தூங்காமலாவது இருக்கலாம் அல்லவா என்று கேட்பாள்.
அவளுக்கு இன்னமும் அவருடைய கணவரின் இறப்பு குறித்தான வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. நிகழ்ச்சிக்குள் நான் இவளை காதலிக்கிறேன் என்று சொன்ன பொழுது, இது எல்லாம் நிகழ்ச்சிக்காக செய்கிறார்கள் என்றார்கள்.
வெளியே வந்த பின்னர் எல்லாம் கொஞ்ச காலம் இருக்கும் என்று பேசினார்கள். இதனையடுத்து இவர்கள் இருவரும் தற்போது லிவிங் டு கெதிரில் இருக்கிறார்கள். பின்னர் விட்டு விடுவார்கள் என்றார்கள். ஆனால் நாங்கள் வரும் ஏப்ரலில் கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறோம்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்