Marry Me.. புரொபோஸ் செய்த செளந்தர்யா.. என் வாழ்க்கையில் இதுபோல் நடந்ததில்லை! வெட்க சிரிப்பு - பிக்பாஸில் க்யூட் சம்பவம்
தன்னை சந்தித்து சர்ப்ரைஸ் செய்ய வந்து விஷ்ணுவிடம் will you marry me என புரொபோஸ் செய்து காதலை வெளிப்படுத்தியுள்ளார் செளந்தர்யா. இந்த புரொமோ விடியோ வைரலாகி வருவதுடன் ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. இதுவரை நடந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். தற்போது நிகழ்ச்சி 80 நாள்களை கடந்திருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளது.
பிக் பாஸ் முந்தைய சீசன்களை விட மிகவும் உப்பு சப்பு இல்லாத சீசசனாக தற்போது நடந்துகொண்டிருக்கும் பிக் பாஸ் 8 இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த கருத்துகளை ஆமோதிப்பதுபோல் டிஆர்பியிலும் பெரிய அளவில் முன்னேற்றம் காணாமலேயே இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பல்வேறு விதமான சர்ச்சைகளை கிளப்பியும், சண்டை சச்சரவுகளை ஊதி பெரிசாக்கியும் இந்த சீசன் பெரிய அளவில் எடுபடாமலேயே உள்ளது.
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு இடையிலான சந்திப்பு, அப்போது நடக்கும் உணர்ச்சி பூர்வமான தருணங்கள், அதன் விளைவாக ஏற்படும் பிரச்னைகள் என கடந்த சில நாள்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
