Bigg Boss 8: பள்ளிகளுக்கு நா. முத்துக்குமார் புத்தகங்கள்.. பிரண்ட்ஸ்க்கு உதவி.. பிக் பாஸ் வின்னர் முத்துக்குமரன் பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 8: பள்ளிகளுக்கு நா. முத்துக்குமார் புத்தகங்கள்.. பிரண்ட்ஸ்க்கு உதவி.. பிக் பாஸ் வின்னர் முத்துக்குமரன் பேச்சு

Bigg Boss 8: பள்ளிகளுக்கு நா. முத்துக்குமார் புத்தகங்கள்.. பிரண்ட்ஸ்க்கு உதவி.. பிக் பாஸ் வின்னர் முத்துக்குமரன் பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 19, 2025 11:45 PM IST

Bigg Boss 8 Grand Finale: பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் வென்ற பணத்தை வைத்து நா. முத்துகுமார் புத்தகங்களை அரசு பள்ளிகளுக்கு தருவேன் என வெற்றியாளர் முத்துக்குமரன் கூறியுள்ளார்.

 பள்ளிகளுக்கு நா. முத்துக்குமார் புத்தகங்கள்.. பிரண்ட்ஸ்க்கு உதவி.. பிக் பாஸ் வின்னர் முத்துக்குமரன் பேச்சு
பள்ளிகளுக்கு நா. முத்துக்குமார் புத்தகங்கள்.. பிரண்ட்ஸ்க்கு உதவி.. பிக் பாஸ் வின்னர் முத்துக்குமரன் பேச்சு

பிக் பாஸ் 8 வெற்றியாளர்

எல்லோரும் எதிர்பார்த்தது போல் முத்துக்குமரன் பிக் பாஸ் சீசன் 8 போட்டியின் வெற்றியாளர் ஆகியுள்ளார். இதன்மூலம் பிக் பாஸ் விருதை வென்ற ஆறாவது ஆண் போட்டியாளராக மாறி இருக்கிறார். செளந்தர்யா முதல் ரன்னர் அப்பாகவும், விஜே விஷால் இரண்டாவது ரன் அப்பாகவும் ஆகியுள்ளனர். செளந்தர்யா ரன்னர் அப் ஆகியிருக்கும் மூன்றாவது பெண் போட்டியாளராக உள்ளார். வெற்றியாளர் முத்துக்குமரநுக்கு பரிசு தொகையாக ரூ. 40.50 லட்சம் வழங்கப்பட்டது.

சோஷியல் மீடியா இன்ப்ளூயன்சரும், யூடியூப்பருமான முத்துக்குமரன், விஜய் டிவியில் ஒளிபரப்பான சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவராக உள்ளார். கடைசி நேரத்தில் விஜே விஷால் பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையில் வைத்து எலிமினேட் செய்யப்பட்டார்.

இது ஒரு பெண்ணுக்கு கிடைத்த வெற்றி

"இது எங்கள் 24 பேருடையது. எங்களுக்கு வேலை செஞ்ச 500 பேரின் உழைப்பு. எனது வெற்றி மட்டும் இல்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும், ஏழ்மையிலும் தன்னம்பிக்கையை விட்டுக்கொடுக்காத பெண்ணின் வெற்றி. அந்த பெண் எனது அம்மா.

ரெண்டே ரெண்டுதான் சொல்லி கொடுத்தாங்க. தப்பு செய்யக்கூடாது. இன்னென்று உழைப்பு. என்னால் முடியாது என யாராவது சொன்னால் முத்துக்குமரனாலேயே முடிஞ்சுச்சு, உனக்கென்னன்னு சொல்லுங்கு. எனக்கு வாக்கு அளித்து, ஆதரவு அளித்தவர்களுக்கு அடிமனசில் இருந்து நன்றி" என்றார்.

அரசு பள்ளிக்கு புத்தகங்கள் வழங்குவேன்

முன்னதாக, பிக் பாஸில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பணத்தை வைத்து என்ன செய்வேன் என்பது குறித்து மேடையில் வைத்து பேசிய முத்துக்குமரன், "நாங்கள் கடன் இல்லாமல் வாழ்ந்துவிட்டோம். ஆனால் வீடு கட்டி பாதியில் இருக்கிறது. அந்த கடனை அடைக்க வேண்டும். பிரண்ட்ஸ் இருவருக்கு பிஸினஸுக்கு சிறிய அளவு முதலீடு செய்ய உதவுவேன். நா.முத்துக்குமார், செல்வேந்தரின் புத்தகங்கள் வாங்கி அரசு பள்ளி, சிறுவர் சீர்திருத்த பள்ளிகளுக்கு கொடுக்க ஆசை" என்றார்.

இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாள்களுக்கு சில சிறப்பு விருதுகளை வழங்கினார் தொகுப்பாளர் விஜய் சேதுபதி. அதன்படி விருதுகளை வென்ற போட்டியாளர்கள் பின்வருமாறு

கேப்டன் ஆஃப் தி சீசன் விருது - இந்த விருதை பெற்ற தீபக், கேப்டன்சி வந்தவுடன் என்ன செய்யனும்ன்னு முதலில் புரியவில்லை. ஆனால் எனக்கு இந்த விருது கிடைக்க காரணமாக இருந்தது ஹவுஸ்மேட்ர்தான். இந்த விருது எனக்கு கிடைத்தது நீங்க தான் காரணம்

மாஸ்டர்ஸ் ஸ்டாடர்ஜிஸ்ட் விருது - பொது நிறைய கேள்விகள் எனக்கு ஏற்பட்டது. அதுதான் விளையாட்டிலும் மாற்றங்கள் ஏற்படுத்தியது. விருதுக்கு நன்றிகளை என விருதை பெற்ற ஆனந்தி கூறினார்

அட்டென்ஷன் சீக்கர் விருது - எனக்கு சார் கையால் இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சி. நல்ல உழைப்பை வெளிப்படுத்துபவர்களுக்கு ஒரு விஷயம் எப்படியாவது காத்திருக்கும் என விருதை பெற்ற ராணவ் கூறினார்.

டாஸ்க் ஸ்பெஷலிஸ்ட் விருது ரயானுக்கு வழங்கப்பட்டது. இதை பெற்றுக்கொள்ள வந்த அவரை முதலில் கைகாட்டி அழைத்தார். பின் மேடைக்கு வந்த ரயானிடம் உங்களை கூப்பிடவே இல்லை என விஜய் சேதுபதி கலாய்த்தார். தொடர்ந்து இந்த ஓவர் கான்பிடனஸ் தான் உங்களுக்கு இந்த விருது கிடைக்க வைத்துள்ளது என்றார்.

கேம் சேஞ்சர் விருது - முழுக்க விளையாட்டா பார்த்து தான் உள்ளே போனேன். மக்கள் எண்டர்டெயின்மெண்டாக பார்க்குறாங்க. அதுக்கு பொருத்தமாக இந்த விருது அமைஞ்சிருக்குன்னு நம்புறேன் என விருதை பெற்ற மஞ்சரி கூறினார்.

சூப்பர் ஸ்ட்ராங் விருது - ரொம்ப சந்தேஷமாக. சூப்பர் ஸ்ட்ராங் என்பது எவ்வளவு ஸ்ட்ராங்காக இருக்கிறது என்பது புரிகிறது. அது இந்த நிகழ்ச்சியின் மூலம் நடந்திருப்பது சந்தோஷம் என்று விருதை பெற்ற ஜாக்குலின் கூறினார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.