Bigg Boss 8 Grand Finalae: எதிர்பாராத எவிக்ஷன்.. விஜய் சேதுபதி சொன்ன வார்த்தையால் குஷியான ஜாக்குலின்
Bigg Boss 8 Grand Finalae: திடீர் எவிக்ஷனால் மனம் நொந்தபடி வெளியேறிய ஜாக்குலின், இறுதிப்போட்டியில் அனைத்தையும் மறந்து ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் 105 நாள்கள் ஒளிபரப்பாகி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் முறையாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ப்ரைஸ்களும், திருப்பங்களும் அரங்கேறியுள்ளன.
முந்தையை பிக் பாஸ சீசன்களை போல் இந்த சீசனில் காதல் கதைகள், மோதல்கள், சர்ச்சைகள் என பெரிதாக இல்லாவிட்டாலும் போட்டிகள், திறமையை வெளிப்படுத்தும் தருணங்கள் ஏராளமாக இருந்தன.
பிக் பாஸ் பைனலிஸ்ட்கள்
இந்த சீசனுக்கான பைனலிஸ்ட்களாக முத்துக்குமரன், செளந்தர்யா, விஜே விஷால், ரயான், பவித்ரா ஜனனி என ஐந்து போட்டியாளர்கள் வந்தார்கள். இவர்களில் ரயான் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நுழைந்தவர்.
இதையடுத்து சீசனின் இறுதிநாளான இன்று திடீர் டுவிஸ்டாக பவித்ரா ஜனனி, ரயான் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனால் முத்துகுமாரன், செளந்தர்யா, விஜே விஷால் ஆகியோருக்கு ஒருவர் தான் வெற்றியாளர் என மும்முனை போட்டி உருவாகியுள்ளது.
எதிர்பாராத டுவிஸ்ட்
பைனலிஸ்டாக நுழவதற்கு நடத்தப்பட்ட கேஷ் பேக் டாஸ்கில் வெற்றி பெற்ற போதிலும் இரண்டு விநாடிகள் தாமதமாக வந்ததாக ஜாக்குலின் கடைசி போட்டியாளாராக யாரும் எதிர்பார்த்திடாத நிலையில் எவிக்ட் செய்யப்பட்டார். இதில் ஏமற்றம் அடைந்த ஜாக்குலின் கண்ணீருடன் வெளியேறினார்.
ஜாக்குலின் வெளியேற்றம் இந்த சீசனில் எதிர்பாராத டுவிஸ்டாக அமைந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
விஜய் சேதுபதியால் குஷியான ஜாக்குலின்
இதைத்தொடர்ந்து பிக் பாஸ் 8 கிராண்ட் ஃபினாலேவுக்கு வந்த ஜாக்குலின் தனக்கு நடந்த ஏமாற்றத்தை மறந்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பிக் பாஸ் வீட்டில் அவரது பயணம் திரையிடப்பட்டது. இதை பார்த்தவுடன் தொகுப்பாளரான விஜய் சேதுபதி, உங்களுடைய எவிக்ஷன் நானே எதிர்பார்க்கவில்லை. நான் உங்கள் பக்கத்தில் இருந்திருந்தால் உங்களை எவிக்ட் செய்ய விட்டிருக்க மாட்டேன்.
நீங்கள் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது மக்களின் ஆசை மட்டும் அல்ல என்னுடைய ஆசையும் தான் என்றார். இ தை கேட்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த ஜாக்குலின் மேடையில் கதறி அழுதுள்ளார். முன்னதாக, ஜாக்குலின் பெயரை விஜய் சேதுபதி சொன்னதும் அங்கிருந்த பார்வையாளர்கள் எல்லோரும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
பெரிய சாதனையாக நினைக்கிறேன்
பின்னர், நான் என்னதான் செய்தாலும் எல்லோரும் ஓகே என்று சொல்கிறார்களே தவிர என்னுடைய திறமையை பாராட்டியது கிடையாது. ஆனால் இன்று இந்த மேடையில் உங்களுடைய பாராட்டு மற்றும் மக்கள் எனக்கு தரும் கைத்தட்டல் பார்க்கும்போது நான் ஏதோ செய்திருக்கிறேன் என்று எனக்கு தெரிகிறது. இதுவே நான் செய்த பெரிய சாதனையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

டாபிக்ஸ்