Bigg Boss 8 Grand Finalae: கடைசி நாளிலும் சூடு பிடிக்கும் போட்டி.. ஐந்து பைனலிஸ்ட்களில் இருவரை வெளியேற்றிய பிக் பாஸ்
Bigg Boss 8 Grand Finalae: கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிநாளான இன்று பைனல் வரை வந்த ஐந்து பேரில் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8, கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது 105வது நாளை எட்டியுள்ளது. இன்று இரவு நிகழ்ச்சியின் கிராண்ட் பைனாலே ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீசனில் மொத்தமாக பங்கேற்ற 24 போட்டியாளர்களின் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என இறுதிப்போட்டி களைகட்ட உள்ளது.
இறுதி நாளிலும் நடந்த டுவிஸ்ட்
வாரந்தோறும் ஒவ்வொரு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட இறுதியில் 5 போட்டியாளர்கள் மட்டுமே பைனலிஸ்டாக தேர்வாகியுள்ளனர். அதன்படி முத்துக்குமரன், செளந்தர்யா, விஜே விஷால், பவித்ரா ஜனனி, ரயான் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளனர்.
இதையடுத்து போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை அறிவிக்கும் இறுதிநாளில் திடீர் டுவிஸ்டராக பைனலிஸ்டாக இருந்த பவித்ரா ஜனனி, ரயான் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனால் தற்போது எஞ்சியிருக்கும் மூன்று பேருடன் வைத்து மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கேஷ் பேக் டாஸ்க்
பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையுன், டிராபியும் வழங்கப்படுகிறது. இதில் கேஷ் பேக் டாஸ்கில் வெற்றிக்கான பணத்தை போட்டியின் மூலம் கேஷ் பேக் பெறும் விதமாக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு டாஸ்க் வைக்கப்பட்டது. அப்படி வெற்றி பெற்று ரூ. 9 லட்சம் 50 ஆயிரம் வரை கேஷ் பேக் வெல்லப்பட்டிருக்கும் நிலையில், ரூ. 40.50 லட்சமே டைட்டில் வின்னருக்கு கிடைக்கும் பரிசு தொகையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் வைல்ட் கார்டு போட்டியாளராக இந்த சீசனில் நுழைந்த ரயான் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு வந்தார். இருப்பினும் டைட்டில் வின்னருக்கான வாய்ப்பு முத்துக்குமரன், செளந்தர்யா ஆகியோர் இடையே மட்டும் இருப்பதால் மூன்றாவது ரன்னர் அப்பாக ரயான், நான்காவது ரன்னர் அப்பாக பவித்ரா ஜனனி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் இறுதி நாளில் திடீர் டுவிஸ்டாக இவர்கள் இருவரையும் முதலில் வெளியேற்றி போட்டி களத்தை மேலும் சூடு பிடிக்க வைத்துள்ளனர்.
கேஷ் பேக் தொகையுடன், சம்பளம்
பிக் பாஸ் வீட்டில் 105 நாள்களாக பவித்ரா ஜனனி இருந்துள்ளார். ஏற்கனவே அவர் கேஷ் பேக் டாஸ்கில் ரூ. 2 லட்சம் வென்றுள்ளார். அதேபோல் ரயானும் ரூ. 2 லட்சம் கேஷ்பேக் டாஸ்க்கில் வென்றுள்ளார். அத்துடன் இவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த நாள்களுக்கான சம்பளத்துடன், இந்த கேஷ் பேக்கும் சேர்த்து வழங்கப்படும் என தெரிகிறது.
எதிர்பாராமல் வெளியேறிய ஜாக்குலின்
முன்னதாக, பைனலிஸ்ட்கான லிஸ்டில் ஜாக்குலினும் இடம்பிடித்திருந்த நிலையில் கேஷ் பேக் டாஸ்கில் வெற்றிகரமாக பெட்டியையும் தூக்கிவிட்டு உள்ள வந்தார். ஆனால் அவர் இரு விநாடிகள் தாமதமாக வந்ததாக கூறி வெளியேற்றப்பட்டார்.
யாருமே எதிர்பார்த்திடாத டுவிஸ்டாக ஜாக்குலின் வெளியேறியது அமைந்தது. 102 நாள்கள் வரை பிக் பாஸ் வீட்டில் தாக்குபிடித்த ஜாக்குலின் கண்ணீருடன் வெளியேறினார். இந்த கேஷ் பேக் டாஸ்க்கில் வெளியே ஓடி சென்று, பணப்பெட்டியை எடுக்காமல் பாதி தூரத்தில் திரும்பி வந்து தன் இருப்பை உறுதி செய்து கொண்டார் பைனலிஸ்டான செளந்தர்யா.

தொடர்புடையை செய்திகள்