Bigg Boss 8: பிக் பாஸ் டாக்ஸிக் இல்லாத சீசன்.. நல்லா பிரியாணி சாப்பிட்டேன் - எவிக்ட் ஆன போட்டியாளர்கள் ஷேரிங்க்ஸ்
Bigg Boss 8 Grand Finalae: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பிரியாணி சாப்பிட்டது முதல் உறவுகளை புதுப்பிச்சது வரை போட்டியாளர்கள் தங்களது அனுபவங்களை எமோஷனலாக பகிர்ந்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 8 போட்டி கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், 105 நாள்கள் ஒளிபரப்பாக தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் பைனலிஸ்டாக முத்துகுமரன், செளந்தர்யா, விஜே விஷால், பவித்ரா ஜனனி, ரயான் ஆகியோர் உள்ளனர். இதில் திடீர் டுவிஸ்டாக பவித்ரா ஜனனி, ரயான் ஆகியோர் கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கிய நிலையில், பிக் பாஸ் 8 சீசனில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் ஆட்டோ, சைக்கிள், விண்டேஜ் கார் என பல்வேறு வாகனங்களில் ஜோடியாக வந்து என்ட்ரி கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து ரோஸ் நிற கோட் சூட் அணிந்து வந்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, போட்டியாளர்களை ஒவ்வொருவரிடமும் தங்களது அனுபவத்தை பகிருமாறு கூறினார். இதையடுத்து இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களது அனுபவம் பற்றி பேசியதாவது.
ஆனந்தி
உள்ளே நிறைய விஷயங்கள் பார்த்தோம். வெளில இருந்து பேசிய விஷயத்தையும் பார்த்தோம். மறுபடியும் போகும்போது போட்டியாளர்கள் என்பதை கடந்து எல்லோரையும் எப்படி ரசிச்சோம் என்பதை நினைத்தது திருப்தியாக இருந்தது. டாக்ஸிக் ப்ரீ சீசனாக இது இருந்தது.
வர்ஷினி
மொத்த பயணமும் சூப்பராக இருந்தது. எல்லாருமே சண்டை போட்டோம். அதேபோல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாம்.
ராணவ்
செம அனுபவமா இருந்துச்சு. முதலில் பயந்து தான் உள்ள போனேன். நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். என்னை நானே செதுக்கிகிட்டேன். என் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக இதை நினைக்கிறேன்.
சுனிதா
பிக் பாஸ் 8இல் நீங்கதான் ராஜா, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் தான் ரோஜா. நான் இருந்த 35 நாள்களில், என் தங்கச்சி என்னை அம்மா மாதிரி பார்க்கிறாள் என்பது புரிந்தது. வெளியே சென்ற பின்னர் தங்கச்சியுடன் அதிக நேரம் செலவழிச்சேன். நான் சொன்ன கவிதைகளின் ஸ்பான்சர் தீபக் தான்.
மஞ்சரி
வெளியே போனதுடன் என் அப்பாவிடம் உறவை புதுப்பிச்சேன். முகம் தெரியாத மனிதர்களுடன் பழகிய பழக்கம் தான் காரணம். அந்த விஷயத்தை பிக் பாஸ் கற்றுக்கொடுத்தது.
தீபக்
நீங்கள் சொல்லி அனுப்பிய மாதிரி வெளியே போய் பொங்கலை சிறப்பாக கொண்டாடினேன். என் தம்பி முத்துகுமரனை மிஸ் பன்னேன்
தர்ஷிகா
என் அம்மாவை சமாதனப்படுத்தவே நேரம் சரியாபோச்சு. எது செய்யனும், செயயக்கூடாதுன்னு இந்த வீட்டில் கத்துகிட்டேன். நிறைய அனுபவம். டாஸ்க்குகளை மிஸ் செஞ்சேன்.
அன்ஷிதா
மூன்றாவது வாரத்தில் இருந்தே நிறையே விஷயங்களை யோசிச்சேன். நான் ஒருவரிடம் கெஞ்சிய நபரை சந்தித்து நீ என் வாழ்க்கையில் வேண்டாம் என தைரியமாக கூறினேன்.
தர்ஷா
பிக் பாஸ் வீட்டை வெளியே வந்தவுடன் ஒவ்வொரு நாளும் விதிவிதமா பிரியாணி சாப்பிட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்க பார்க்க இருந்துச்சு. படையப்பா நீலம்பரி போல் பார்த்துட்டே இருந்தேன்
ஜெஃப்ரி
பிக் பாஸை விட்டு வெளியேறியவுடன் அம்மாவிடம் தக்காளி சாதம் சாப்பிட்டேன். பிரண்ட்ஸை விட பிக் பாஸ் வீட்டை ரொம்ப மிஸ் பன்னேன். ஸ்கூல விட இந்த வீட்டில் நிறைய கத்துக்கிட்டேன்
ரஞ்சித்
பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு புதிய ரஞ்சித்தாக பீல் செய்கிறேன். எல்லாத்தையும் டாஸ்க் போல் பார்க்குறேன். எனது எபிசோடுகள் பார்க்க ரொம்ப நிறைவா இருந்தது.
அருண்
பேமியுடன் பொங்கலை கொண்டாடினேன். வீட்டில் உள்ளே இருந்தபோது வெளியே போனதும் என்ன செய்யனும் என்ற லிஸ்ட் இருந்துச்சு. அவற்றை நான் செஞ்சாலும் பிக் பாஸ் வீட்டில் உள்ள விஷயங்களே நியாபகம் வந்தது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்