தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: ஆப்பு ரெடி.. மீண்டும் உள்ளே வரும் பழைய போட்டியாளர்கள் இவர்களா?

Bigg Boss 7 Tamil: ஆப்பு ரெடி.. மீண்டும் உள்ளே வரும் பழைய போட்டியாளர்கள் இவர்களா?

Aarthi V HT Tamil
Nov 20, 2023 02:12 PM IST

பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே யார் வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

ட்ரெண்டிங் செய்திகள்

தினேஷ், அர்ச்சனா, கானா பாலா, அன்னா பாரதி, பிரவோ ஆகியோர் வந்தனர். இதில் அன்னா பாரதி மற்றும் கானா பாலா ஆகியோர் குறைவான வாக்குகள் பெற்றனர் என்ற அடிப்படையில் வெளியேறி இருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கான மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வரப்போகிறார்கள். ஆனால் புதிய ட்விஸ்டாக புது போட்டியாளர்களுக்கு பதிலாக ஏற்கனவே எவிக்‌ஷன் செய்யப்பட்டு அனுப்பட்டு இருக்கும் போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் வர இருக்கிறார்கள்.

இது தொடர்பான ப்ரோமோ வெளியானதில் இருந்து யார் உள்ளே வருவார்கள் என பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த முறை வினுஷா, விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வினுஷா உள்ளே வந்தால் நிச்சயம் நிக்சன் விளையாட்டு பாதிக்கப்படும். ஏனென்றால் வினுஷா பற்றி நிக்சன் ,“அவர் ஒரு வேலைக்காரி. அவ என்னோட டைப் இல்ல. ஒரு ஒருத்தங்களுக்கு ஏதாவது ஒன்னு அட்ராக்ட் ஆக வேண்டும். எனக்கு வந்து உடலழகு சரியாக இருக்க வேண்டும். 

வினுஷா தேவிக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு அழகா இருக்கு. ட்ரெஸ் போட்டா பெர்ஃபெக்டா இருக்கு. அது ஓகே. பூர்ணிமா அக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரி பெர்ஃபெக்டா இருக்கணும்’ என பேசினார்.  இது பெரும் சர்ச்சையான நிலையில் வினுஷாவிற்கு, நிக்சன் மேல் கோபம் இருக்கிறது. 

அதே போல் விஜய் வர்மா ஸ்டார்ங் போட்டியாளர். அவர் உள்ளே வந்தாலும் வரும் வாரங்களில் கடுமையான டஃப் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்