தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss 7 Tamil: Vijay Varma Eliminated In Midweek Eviction

Bigg Boss 7 Tamil: கடைசி வார டுவிஸ்ட்! மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 09, 2024 05:19 PM IST

பிக் பாஸ் சீசன் 7 கடைசி வாரத்தில் திடீர் டுவிஸ்டாக மிட் வீக் எவிக்‌ஷனில் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமல்ஹாசன்
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தி வாரத்துடன் பிக் பாஸ் 7 நிறைவு பெறபோகும் நிலையில், கடந்த ஞாயிறு எவிக்‌ஷனுக்கு பிறகு ஆறு போட்டியாளர்கள் எஞ்சியிருந்தனர். இதில் மாயா, அர்ச்சனா ஆகியோர் மட்டும் பெண் போட்டியாளராக இருந்தனர்.

கடைசி வாரத்தில் பைனலிஸ்ட் யார் என்ற அறிவிப்பு வருவதற்கு முன் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தின் மிட் வீக் எவிக்‌ஷனாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளாராம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் வர்மா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் வர்மா

யாருமே எதிர்பார்த்திராத நிலையில் திடீரென இந்த எவிக்‌ஷ்ன் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய எபிசோடில் விஜய் வர்மா எவிக்‌ஷன் செய்யப்பட்டது குறித்து காண்பிக்கப்படும் என தெரிகிறது.

பிக் பாஸ் 7 பைனலிஸ்டில் விஜய் வர்மாவும் வரலாம் என்கிற பேச்சு அடிபட்ட நிலையில், அவரை வெளியேற்றி இருப்பது போட்டியை இன்னும் சுவாரஸ்யபடுத்தியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக களமிறங்கிய விஜய் வரமா 21வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். இதன் பின்னர் ஒயில்ட் கார்டு என்ட்ரி மூலம் 56வது நாளில் மீண்டும் பிக் பாஸ் வீட்டினுள் நுழைந்தார். அவர் பிக் பாஸ் வீட்டில் மொத்தமாக 44 நாள்கள் வரை இருந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.