Bigg Boss 7 Tamil: ‘தவறான பாதை..’ மாயாவிற்காக குடும்பத்தை எதிர்க்கும் சரவண விக்ரம்.. கடுப்பான தங்கை
சரவண விக்ரமின் செயல் அவரின் தங்கைக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் 7 ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் இறுதி நாள் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
யாரும் எதிர்பார்க்காத விதமாக வார நடு பகுதியில் எவிக்ஷன் நடந்தது. அர்ச்சனா, மாயா, தினேஷ், விஜய் வர்மா, விஷ்ணு, மணி சந்திரா ஆகியோர் இதை சந்தித்தார்கள். இறுதியாக ஐந்து பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் விஜய் வர்மா வெளியே சென்றார்.
இந்நிலையில் இது பேனல்ஸ் வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்ட்டாகி சென்ற போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வரை ஒரு சிலர் வந்து இருக்கிறார்கள்.
முதல் நபராக அனன்யா ராவ், அக்ஷயா, வினுஷா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், பிரவோ, ரவீனா, பூர்ணிமா, கானா பாலா ஆகியோர் வந்து உள்ளனர்.
உள்ளே வந்ததும் யாரும் நண்பர்களாக பழகாமல் அதே இரண்டு அணிகளாகவே இருக்கிறார்கள். மாயா டீம், பாய்ஸ் டீம் என இரண்டு அணி கடைசி நாள் வர இருக்கிறது. மேலும் அனைவரும் வரும் முன்பு ஒரு விதமாக பழகி கொண்டு இருந்த மாயா, அவரின் நண்பர்கள் வருகைக்கு பிறகு அப்படியே முழுவதுமாக மாறிவிட்டார்.
அந்த வகையில் ஏற்கனவே சண்டையில் இருந்த மாயா, சரவண விக்ரம் இந்த முறை ஒன்றாக சேர்ந்துவிட்டார்கள். அவர் குடும்பத்தினர் வருகையின் போது சரவண விக்ரம் தங்கை வந்து அறிவிரை கூறினார். அப்போது மாயாவின் குணம் புரிந்து அவர் ஒதுங்கி இருந்தார். ஆனால் இந்த முறை தன் தங்கை சொன்னது தவறு என நினைத்து கொண்டு மாயாவுடன் பழக ஆரம்பித்துவிட்டார்.
இதனால் சரவண விக்ரமின் தங்கைக்கு கோபம் வந்து உள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில், “ ஒருவர் குடும்பத்தை விட வேறு ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் தவறான பாதைக்கு செல்கிறீர்கள் என்று அர்த்தம் “ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.