தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss 7 Tamil Maya Pr Team Is Working On Full Form

Bigg Boss 7 Tamil: ஃபேன் மாட்டியாச்சு.. தீயாக வேலை செய்யும் மாயா பிஆர் டீ டீம்ஸ்

Aarthi Balaji HT Tamil
Jan 09, 2024 11:30 AM IST

மாயா பிஆர் டீ டீம்ஸ் தீயாக வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

மாயா
மாயா

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் விஷ்ணு டிக்கெட் டூ பினாலே வென்று இருந்தார். மக்களின் கணக்கு படி அர்ச்சனாவிற்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கும் தெரிந்துவிட்டது. 

இதனிடையே திடீரென மாயா சமீபத்தில், பிக் பாஸ் குழுவினருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.

”என்னுடைய வீட்டில் ஃபேன் இல்லை. என் அக்காவிடம் சொல்லி ஏசி மாட்ட சொல்லுங்கள். ஹாலில் மாட்ட சொல்லுங்கள். ஏசி மாட்டினால் ஜன்னல்களை சீல் வைக்க வேண்டி இருக்கும். நான் அதை வந்து பார்த்துக கொள்கிறேன்.  

எந்த ஏசியாக இருந்தாலும் பரவாயில்லை. 1.5 டன் ஏசி, எந்த நிறுவனமாக இருந்தாலும் பரவாயில்லை. செய்ய சொல்லுங்கள். கொஞ்சம் அர்ஜெண்டான விஷயம் இது “ என பேசி இருந்தார். 

இன்னும் நிகழ்ச்சி முடிய ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், திடீரென வீட்டில் ஃபேன் இல்லை ஏசி மாட்ட சொல்லுங்கள் என்று அவர் சொன்னது நெட்டிசன்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.   மேலும் தனக்கு பிஆர் டீ டீம் மூலம் வாக்கு போட சொல்லவே இந்த தந்திரத்தை அவர் செய்து இருக்கிறார் என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விஷயம் தொடர்பாக மாயா சமூக வலைதளங்களில் இருந்து ஒரு பதிவு வெளியாகி உள்ளது.

அதில் சுவரில் இரண்டு ஃபேன் மாட்டப்பட்டு உள்ளது. மேலும் இப்போது இரண்டு ஃபேன் வீட்டில் இருக்கிறது. மற்ற அனைத்தும் வெளியே இருக்கிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும்  இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஃபேன் மாட்டியாச்சு.. நீங்கள் வாக்கு செலுத்திவிட்டீர்களா? என கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.

இந்த கோட் வேர்ட் மூலமாக மாயா தனக்கு ஆதரவைத் திரட்ட மறைமுகமாக பேசியது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கமல் ஹாசன் கேள்வி கேட்க வேண்டும் என அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.