Bigg boss 7 Tamil: ரச்சிதாவிற்காக தினேஷ் போட்ட பலே ப்ளான்;விஜய் டிவியியை அதிரவைத்த பவர்பாயிண்ட்!- என்ன சங்கதி தெரியுமா?
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்க வேண்டும் என்று ஒரு பவர் பாயிண்ட்டை ரெடி செய்து, சேனலுக்கு அனுப்பினார். அவரது அந்த வித்தியாசமான முயற்சி செய்த பாணி அவர்களுக்கு பிடித்து விட்டது. வாய்ப்பும் கிடைத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி இருப்பவர் தினேஷ். இவரும் அவரது மனைவி ரச்சிதாவும் கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், மீண்டும் ரச்சிதாவுடன் இணைய விரும்புவதாக பேசினார். இந்த நிலையில் இவர் குறித்து ஆர்.ஜே. ஷா தன்னுடைய யூடியூப் சேனலில் அண்மையில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “பிரேக் அப்பிற்கு பிறகு மனம் உடைந்து இருந்த தினேஷ் ராகவேந்திரா கடவுளை சென்று சந்தித்தார். அதனைத்தொடர்ந்து விஜய் டிவின் சீரியலில் நடிப்பதற்காக அலைந்து திரிந்த தினேஷிற்கு ஒரு வழியாக ஒரு சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் நடித்துக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில் தான் பிக் பாஸ் சீசன் 7 தொடங்கியது.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்க வேண்டும் என்று ஒரு பவர் பாயிண்ட்டை ரெடி செய்து, சேனலுக்கு அனுப்பினார். அவரது அந்த வித்தியாசமான முயற்சி செய்த பாணி அவர்களுக்கு பிடித்து விட்டது. வாய்ப்பும் கிடைத்தது.
கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக கணவன் மனைவியாக ரச்சிதாவும் இவரும் வாழ்ந்து வந்த நிலையில், இரண்டு வருடங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்தார்கள். அப்போது ரச்சிதாவின் அப்பா தவறி விட, ரச்சிதாவே தினேஷுக்கு அந்த தகவல் சொல்கிறார்.
இதனையடுத்து தனது குடும்பத்துடன் அவர் பெங்களூர் சென்று செய்ய வேண்டிய வேலைகளை செய்தார். அதன் பின்னரே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்றார். நிகழ்ச்சிக்குள் நுழைந்ததுமே நானும் ரச்சிதாவும் சில காரணங்களால் பிரிந்தோம். ஆனால் நாங்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று சொன்னார்
டாபிக்ஸ்