Bigg Boss 7 Tamil: லைஃப்டைம் செட்டில்மெண்ட்.. பிக் பாஸ் வென்ற அர்ச்சனா ஒரு நாள் சம்பளம் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: லைஃப்டைம் செட்டில்மெண்ட்.. பிக் பாஸ் வென்ற அர்ச்சனா ஒரு நாள் சம்பளம் என்ன?

Bigg Boss 7 Tamil: லைஃப்டைம் செட்டில்மெண்ட்.. பிக் பாஸ் வென்ற அர்ச்சனா ஒரு நாள் சம்பளம் என்ன?

Aarthi Balaji HT Tamil
Jan 15, 2024 06:50 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அர்ச்சனா
அர்ச்சனா

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் செயல்பாடுகள் மற்றும் மக்களின் அதிகமான வாக்குகளைப் பெற்று அர்ச்சனா, பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆனார். இதன்மூலம் பிக் பாஸ் தமிழ் 7 வெற்றியாளரான அர்ச்சனாவுக்கு, அவர்களின் மொத்த ஊதியத்துடன் சேர்த்து 50 லட்சம் ரூபாய் கிடைக்கும்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி 105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பதால் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா, மொத்தம் 77 நாட்கள் விளையாடி உள்ளார்.

ஒரு நாளைக்கு அர்ச்சனாவுக்கு சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 77 நாட்கள் அவருக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகையுடன் 50 லட்சம் ரூபாய், 15 லட்சம் மதிப்புள்ள பிளாட், Grand Vitara கார் ஆகியவை அவருக்கு பரிசாக கிடைத்து உள்ளது. மொத்தமாக பார்த்தால் அவர் சுமார் 80 லட்சம் மதிப்பில் பரிசை அள்ளி உள்ளார். ரைஸிங் ஸ்டார் பட்டம் அர்ச்சனாவுக்கு தரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 23 போட்டியாளர்கள் பங்கெடுத்து உள்ளனர். 106 நாட்கள் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் 60 கேமராக்கள் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மறைமுகமாகப் பதிவு செய்து, ஒவ்வொரு நாளும் நடந்த சுவாரஸ்யமான தொகுப்புகளை விஜய் டிவியில் இரவு 9.30 மணிமுதல் 11 மணி வரை ஒளிபரப்புவர். டி.ஆர்.பியில் உச்சம் பெற்ற நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.