தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bigg Boss 7 Tamil Archana Left Without Doing The Task Video Released

Archana : நான் இப்படி பட்ட ஒரு ஆளா.. டாஸ்க் செய்யாமல் விலகிய அர்ச்சனா.. கடைசி வாரமே கலவரமா? வெளியான வீடியோ!

Divya Sekar HT Tamil
Jan 08, 2024 09:58 AM IST

Bigg Boss 7 Tamil : இன்றைய பிரமோ வீடியோவில் அர்ச்சனா தினேஷ் வாக்குவாதம் செய்து கொள்வதும், அர்ச்சனா டாஸ்க் செய்யாமல் விலகுவதும் இடம்பெற்றுள்ளது.

டாஸ்க் செய்யாமல் விலகிய அர்ச்சனா
டாஸ்க் செய்யாமல் விலகிய அர்ச்சனா

ட்ரெண்டிங் செய்திகள்

பிரபலமான பிக் பாஸ் 7ஆவது சீசன் இப்போது 14 வது வாரத்தில் உள்ளது மற்றும் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ரூ 1 லட்சம் தொடக்கத் தொகையுடன் கேஷ் பாக்ஸ் திருப்பத்தை அறிவித்தனர்.

போட்டியாளர்களுக்குப் பெட்டியில் இருந்த பணத் தொகையுடன் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பளித்தது. மூன்று நாட்களாக யாரும் எடுக்காமல் இருந்த நிலையில் இறுதியாக பூர்ணிமா ரவி கேஷ் பாக்ஸ் தொகையான ரூ. 16 லட்சத்துடன் விளையாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

அவளின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர் இதை ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்றும் கூறி வருகின்றனர். ஆனால் பூர்ணிமா ரசிகர்கள் சிலர் ஏமாற்றமடைந்துள்ளனர். பூர்ணிமா இறுதிப் போட்டிக்கு வருவதைப் பார்க்க விரும்பினர்.

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விசித்ரா வெளியேற்றப்பட்டார். இவர் கடைசி வாரத்தில் வீட்டிற்குள் செய்த சில நடவடிக்கைகள் அவரது உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காண்பித்தது. அதனுடைய விளைவுதான் அவர் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது என்று விமர்கர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலை தற்போது இன்றைய நிகழ்ச்சியின் பிரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில்,” நான் இப்படிப்பட்ட ஒரு ஆளா அப்படிங்குற ஒரு ஃபீலிங் தான் எனக்குள்ள இருந்தது. நான் பேசும்போது யாருமே குறுக்க பேச கூடாது என சொல்கிறார் அர்ச்சனா. அப்போது தினேஷ் குறுக்கே பேச வருகிறார். அதற்கு அர்ச்சனா நோ நோ நோ என சொல்கிறார்.

அப்போது தினேஷ் கூறுகையில் நீங்கள் நாங்கள் பேசியதை ரிவ்யூ செய்ய வேண்டாம் உங்களைப் பற்றி மட்டும் சொல்லுங்கள் என சொல்கிறார். இதற்கு அர்ச்சனா பிக் பாஸ் நான் இந்த டாஸ்கை செய்ய முடியாது என கூறிக்கொண்டு வெளியே செல்கிறார்” இதுதான் அந்த பிரமோ வீடியோவில் வெளியானது. இதை பார்க்கும் போது கடைவாரம் கலவர வாரமாக இருக்குமோ என்ற கேள்வி தான் எழுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.