Bigg Boss 7 Kondattam: தீராத வன்மம்.. மேடையில் தினேஷிடம் மன்னிப்பு கேட்ட விசித்ரா!
Bigg Boss Kondattam: பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய பாவா செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஐஷு உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.
பிக் பாஸ் சீசன் 7 முடிவடைந்து இரண்டு மாதங்கள் மேல் ஆகிறது. ஆனால் ஏன் இன்னும் பிக் பாஸ் கொண்டாட்டம் இன்னும் நடக்கவில்லை என பார்வையாளர் பலரும் கேட்டு கொண்டே இருந்தார்கள்.
அதற்கு விடையளிக்கும் விதமாக சமீபத்தில் பிக் பாஸ் 7 ஆவது சீசன் கொண்டாட்டங்கள் முடிந்துவிட்டன. அதில் நடந்த சில விஷயங்கள் பற்றய தகவல்கள் கசிந்து உள்ளன. அதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 ஜனவரி மாதம் முடிவடைந்தது. அர்ச்சனா மக்களின் மனதை வென்று டைட்டில் பட்டத்தை தட்டிச் சென்றார். மணிச்சந்திரா முதல் இரண்டாம் இடத்தையும், மாயா மூன்றால் இடத்தையும் பிடித்தார். அடுத்த இடத்தை தினேஷ் மற்றும் விஷ்ணு பிடித்தனர்.
சர்ச்சையில் சிக்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வந்தது. மேலும் நடுவராக இருந்த கமல் ஹாசன் இரண்டாம் தரப்பாக செயல்பட்டதாக பிக் பாஸ் ரசிகர்கள் கூறி அவரை வசைப்பாடினார்கள்.
குறிப்பாக பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் விசாரணையின்றி அவரை வெளியேற்றது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. தன் தவறை மறைக்க சில காரணங்களைச் சொன்னார். அதனால் தற்போது வரை கமல் ஒரு நல்ல நடுவராக நடந்து கொள்ளவில்லை என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
அதே போல், நிக்சன், வினுஷாவை பற்றி பேசியதற்கு ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை கமல் ஹாசன். ஆனால் தினேஷ் தவுலத்து என்று ஒரு வார்த்தைக்கு சொன்னதை மட்டும் கண்டித்தார். கடந்த வாரம் முடிந்த பிக் பாஸ் கொண்டாட்டத்தின் போது பல்வேறு விதமான சர்ச்சைகள் நடந்து இருக்கிறது.
அதிலும் மாயா கும்பல் என்ன சொன்னாலும் ஓவர் கிளாப்ஸ் பறக்கும் போது .. ரொம்ப டஃப் என்று கூல் சுரேஷ் கடுமையாக முணுமுணுத்து கலாய்த்து தள்ளி உள்ளார்.
மேலும், நீங்கள் யாரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்கள் என்று தொகுப்பாளர் ப்ரியங்கா அனைவரிடமும் கேட்டு இருக்கிறார். அதே போல் விசித்ராவிடம், யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கீறிர்கள்? என கேட்டார்.
அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல், தினேஷிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகக் கூறினார், அவர் எதற்காக மன்னிப்பு கேட்கிறார் என்று கூட சொல்லாமல் தினேஷிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாக விசித்ரா கூறுகிறார்.
அவர் எதற்காக மன்னிப்பு கேட்கிறார் என்று தினேஷிடம் கேட்டால் அவர் வழக்கம் போல் அதை புறக்கணிப்பார். கிடைக்காதது போல் உதறித் தள்ளியுள்ளார். மொத்தத்தில் பிக் பாஸ் கொண்டாட்டம் சற்று கோலாகலமாக முடிந்தது.
பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய பாவா செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஐஷு உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter : https://twitter.com/httamilnews
Facebook: https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.