Poornima Ravi: ‘பட வாய்ப்புகள் நிறைய வருது.. தனுஷை பார்க்க ரொம்ப ஆச்சரியமா இருக்கு’ - பூர்ணிமா பேட்டி!
சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில், தான் விரும்பிய கதாபாத்திரங்களை கண்டுபிடிப்பதில் சவால்கள் இருந்ததாக கூறும் அவர், இப்போது அவரை முதன்மைப்படுத்தி நிறைய பட வாய்ப்புகள் வருகிறது என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அது போன்ற வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் திறமையாளர்கள் அது தங்கள் கை வந்து சேரும் போது, அதனை கனகச்சிதமாக பயன்படுத்திக்கொள்வர்.
அப்படியான வாய்ப்புகள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான பூர்ணிமா ரவியின் பக்கம் வர ஆரம்பித்து இருக்கின்றதாம். சமீபத்தில் வெளியான ‘செவப்பி’ படத்தில் இவரது நடிப்பு கவனம் ஈர்த்தது.
சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில், தான் விரும்பிய கதாபாத்திரங்களை கண்டுபிடிப்பதில் சவால்கள் இருந்ததாக கூறும் அவர், இப்போது அவரை முதன்மைப்படுத்தி (female lead characters) நிறைய பட வாய்ப்புகள் வருகிறது என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மேலும் பேசிய அவர், “எனக்கு பிடித்த நடிகர் தனுஷ். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பக்கத்து வீட்டுப் பையன் என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளுக்கு அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள். இதேபோன்ற நடிப்புத் திறமை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் இருக்கிறது.
ஹீரோயின் மெட்டீரியல்' என்று சினிமாவில் எதுவும் இல்லை. படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பை பெறும்போது அதற்கு 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும்” என்று பேசினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பூர்ணிமா ரவி சென்று இருக்கிறார். பூர்ணிமா ரவி ஒரு நடனக் கலைஞராகவும் விஐடி நடனக் கழகத்தின் உறுப்பினராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். டான்ஸ் இந்தியா டான்ஸ் மற்றும் ஜோடி நம்பர் ஒன் போன்ற பல்வேறு டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் அவர் பங்கேற்று இருக்கிறார்.
முன்னதாக, ஐடி தொழிலாளரான பூர்ணிமா அங்கு பணி செய்ய முடியாமல் வேலையை விட்டுவிட்டார். அதன் பின்னர் நரி கூட்டம் சேனலின் மூலம் யூடியூபராக அறிமுகமானார். அங்கு அவர் குறும்படங்களில் நடித்தார்.
பின்னர் ஆராத்தி என்ற மற்றொரு சேனலைத் தொடங்கி தனது நகைச்சுவையான நடிப்பு மூலம் பிரபலமானார். குறிப்பாக அடிங்கு.. அராத்தி.. என்ற வசனம் மூலம் பிரபலமானார்.
அடுத்தும் பல குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்க, பிறகு ஹே சண்டைக்காரி உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் நடித்தார்.
முன்னதாக இவர் கலந்து கொண்ட பேட்டியில் படுக்கையறை காட்சியில் நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், “ ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகள் எதுவாக இருந்தாலும் நடிக்க சம்மதம் தான். ஆனால் அது கதை உடன் ஒத்துப்போக வேண்டும்.
அது வேண்டும் என்றே திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. மேலும் ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் அதை பற்றி நாம் சொல்ல கூடாது “ என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்