Muthukumaran: ‘மூளை வளர்ச்சி கம்மின்னு என்னைய…அந்த வாத்தியார்தான் என்ன மாத்தி.. எனக்கு கட் அவுட்’-முத்துக்குமரன் பேட்டி
Muthukumaran: சன் டிவியில் அரட்டை அரங்கத்தில் பேசினேன். அது எங்கள் ஊரில் மிகப் பெரிய பேச்சு பொருளாக மாறியது; அதற்கு எனக்காக கட் அவுட் எல்லாம் அடித்தார்கள் - முத்துக்குமரன் பேட்டி

Muthukumaran: பிக்பாஸ் டைட்டில் தமிழ் சீசன் 8 -ன் வின்னராக மாறியிருக்கும் முத்துக்குமரன் தனது பள்ளிப்பருவம் குறித்து தன்னுடைய யூடியூப் சேனலில் முன்னதாக பேசியதை பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டத்திலிருந்து கிளம்பும் போது சென்னைக்கு செல்கிறோம். அங்கு சென்று எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று கிளம்பி வந்தேன்; இங்கு ஒரு தனியார் youtube சேனலில் சோசியல் மீடியா எக்ஸிக்யூடிவ் வேலை காலியாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.
அங்கு சென்று அந்த வேலைக்கான விண்ணப்பத்தை கொடுத்தேன்.எக்ஸ் தளத்தில் தமிழில் டைப் செய்து பதிவுகளை வெளியிட வேண்டும் என்று கூறினார்கள்; கொஞ்சம் எதுகை மோனையோடு பதிவுகளை வெளியிட்டேன். என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள்.
வாய்ஸ் ஓவர்
வாய்ஸ் ஓவர் கொடுக்கச்சொன்னார்கள். கொடுத்தேன். நன்றாக இருக்கிறது. கேமரா முன்னர் பயப்படாமல் பேசுவாயா என்றார்கள். முயற்சி செய்கிறேன் என்று சொல்ல, வாய்ப்பு கொடுத்தார்கள். தொடர்ந்து, உன்னுடைய பேச்சு பிரமாதமாக இல்லை; அதே நேரம் வெறுமையாகவும் இல்லை என்று கூற, எனக்கு கதை சொல்ல தெரியும்; கதை சொல்லி பார்க்கட்டுமா என்று கேட்டேன். அதன் பின்னர் கதை சொல்ல ஆரம்பித்தேன்; அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
மூளை வளர்ச்சி
என்னுடைய வீட்டில் நானும் என்னுடைய தங்கையும் இரட்டைக் குழந்தைகள்; பொதுவாக கிராமங்களில் இரட்டைக் குழந்தைகள் என்றால், ஒரு குழந்தை உடல் உபாதையோடு இருக்கும் என்று சொல்வார்கள்; சிறுவயதில் நான் பெரிதாக எதற்கும் ரெஸ்பான்ஸ் செய்யாத காரணத்தால், என்னை மன வளர்ச்சி குன்றிய குழந்தை என்று நினைத்து விட்டார்கள்; ஆனால், என்னுடைய தங்கை மிகவும் சுட்டியாக இருப்பார்.
என்னுடைய அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு கால் ஆணி பிரச்சினை வந்ததால், அவர் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார்; அப்போது என்னுடைய அம்மாவிற்கும், என்னுடைய அப்பாவிற்கும் பெரிய சண்டை நடந்தது. எப்போதும் சண்டை வந்தால், என்னுடைய அப்பா என்னுடைய அம்மாவை அடிப்பார்; அம்மா வாங்கிக் கொள்வார்; ஆனால் இம்முறை அம்மா அப்பாவை எதிர்த்து பேசினார்; எதற்காக என்றால், தன்னுடைய பிள்ளைகள் ஆங்கில பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக.. ஆனால் அப்பாவின் வற்புறுத்தலின் பெயரில் நாங்கள் தமிழில் கல்வியை நானும் தங்கையும் பயின்றோம்.
வாத்தியார் வாக்கு
தமிழ் வழி கல்வியில் தனுஷ் ஸ்டாலின் என்ற ஒரு வாத்தியார் எனக்கு கிடைத்தார். அவர்தான் நான் நன்றாக பேசுகிறேன் என்பதை கணித்து என்னை பேச்சுப்போட்டிகளுக்கு தயார்படுத்தினார்; அப்படி கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தேன்; சன் டிவியில் அரட்டை அரங்கத்தில் பேசினேன். அது எங்கள் ஊரில் மிகப் பெரிய பேச்சு பொருளாக மாறியது; அதற்கு எனக்காக கட் அவுட் எல்லாம் அடித்தார்கள்’ என்று பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்