பிக்பாஸ் சீசன் 8 வைல்ட் கார்ட் என்ட்ரி யாரு தெரியுமா? கசிந்த தகவல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிக்பாஸ் சீசன் 8 வைல்ட் கார்ட் என்ட்ரி யாரு தெரியுமா? கசிந்த தகவல்!

பிக்பாஸ் சீசன் 8 வைல்ட் கார்ட் என்ட்ரி யாரு தெரியுமா? கசிந்த தகவல்!

Suguna Devi P HT Tamil
Oct 28, 2024 12:00 PM IST

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து மிகவும் சுவாரஸ்யமாகவும் பல சண்டை சச்சரவுகளுடனும் களேபகரங்களுடனும் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று வாரமாக மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது ஒயிட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 8 வைல்ட் கார்ட் என்ட்ரி யாரு தெரியுமா? கசிந்த தகவல்!
பிக்பாஸ் சீசன் 8 வைல்ட் கார்ட் என்ட்ரி யாரு தெரியுமா? கசிந்த தகவல்!

பிக் பாஸ் சீசன் எட்டு முதலில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது இதில் புதுவிதமான விதிமுறைகளின் படி முதல் நாள் அன்றே சாட்சனா வெளியேற்றப்பட்டார். பின் ஒரே வாரத்தில் அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். மேலும் முதலாவது வாரத்தில் குறைவான வாக்குகளை பெற்று பேட்மேன் ரவீந்திரன் எலிமினேட் செய்யப்பட்டார்… அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் அர்ணவ் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். மேலும் மூன்றாவது வாரமான கடந்த வாரத்தில் எதிர்பாராத வகையில் தர்ஷா குப்தா குறைவான வாக்குகளே பெற்றுள்ளதாக எலிமினேட் செய்யப்பட்டார். 

வைலட் கார்ட் போட்டியாளர்கள்

 இந்நிலையில் நான்காவது வாரம் தொடங்கியுள்ளது. மேலும் 3 போட்டியாளர்கள் வெளியேறி உள்ள நிலையில் நான்காவது வாரம் முடிவுறும் வேளையில் வைல்ட் காட் என்ட்ரி போட்டியாளர்கள் உள்ளே நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் இரண்டாவது வாரத்தில் வெளியேறிய அர்ணவின் முன்னாள் மனைவி நடிகை திவ்யா கலந்து கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் போட்டியாளரான மாயாவின் சகோதரி சுவாதகாவும் கலந்து கொள்ள உள்ளார். இதனை அடுத்து கூடுதலாக நடிகை ஐஸ்வர்யா நடிகர் டி.எஸ்.கே மற்றும் ஷாலின் ஜோயா ஆகியோரும் கலந்து கொள்ளலாம் என தகவல்கள் வெளிவந்து உள்ளன. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 வைலட் கார்ட் போட்டியாளர்கள் யார் என்று அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில தான் தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இப்போட்டியில் கலந்து கொண்ட அர்ணவ் மற்றும் அக்சிதா குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் அர்ணவின் முதல் மனைவி திவ்யா இந்நிகழ்ச்சியில் மீண்டும் சேர்ந்தால் பல சுவாரசியங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் தொடங்கிய முதல் நாளே குக் வித் கோமாளி புகழ் ஷாலின் ஜோயா இப்போட்டியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் வைலட் கார்டு போட்டியாளராக இவர் உள்ளே நுழைவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. மேலும் முந்தைய சீசனில் பல சர்ச்சைகள் நிறைந்த பிரச்சினைகளை உருவாக்கிய நடிகை மாயாவின் சகோதரி சுவாதகாவும் இந்த சீசனில் வவைலட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நாளுக்கு நாள் சுவாரசியம் நிறைந்த நிகழ்ச்சியாக மாறிக் கொண்டே உள்ளது. விஜய் சேதுபதியின் வெளிப்படையான கேள்விகளாலும், நேரடி விசாரணைக்களாலும் சிறப்பாக மாறி வருகிறது. தற்போது புதிய போட்டியாளர்கள் இந்த போட்டியை எப்படி மாற்றுவார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.   

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.