என்னோட ஹார்லி குயீன் இவங்க தான்! அர்ச்சனாவை அறிமுகப்படுத்திய அருண்! ஒரே ரொமான்ஸ் தான்!
இன்று பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக உள்ள அருணின் காதலியும் கடந்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசன் தொடங்கிய முதல் நாளிலிருந்து மிகவும் புதுவிதமான அனுபவமே ரசிகர்களுக்கு கிடைத்து வருகிறது. உதாரணமாக இந்த சீசனில் புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கினார். வார இறுதியில் போட்டியாளர்களை சரமாரியாக கேள்வி கேட்பது அவர்களை விமர்சிப்பது என விஜய் சேதுபதி தரமாக தொகுத்து வந்தாலும் சில நிலைகளில் மற்றவர்களை மட்டுப்படுத்தி பேசுவதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் இருந்தது.
மேலும் போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் மிகவும் களேபரமாக பிக் பாஸ் வீடு இருந்து வந்தது. கடந்த ஏழு சீசர்களை விட இந்த சீசனும் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 8 முடிய போகிறது. இந்த நிலையில் வார இறுதியில் வரக்கூடிய பிரீசிங் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா
கடந்த சில தினங்களாக போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அவர்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக உள்ள அருணின் காதலியும் கடந்த பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னருமான அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் லைவ்விலும் அர்ச்சனா வந்தது முழுவதும் ஒளிபரப்பாக்கி உள்ளது.
