பிக்பாஸ் விக்ரமன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர்! மனைவி பிரீத்தி சொன்ன ரகசியம்!
பிக்பாஸ் விக்ரமன் ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என நினைத்தேன் என அவரது மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் 8 சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து தற்போது நடந்து வரும் எட்டாவது சீசன் வரை பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவர் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகின்றனர். மேலும் அப்படிப்பட்ட போட்டியாளருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் உள்ளது. இந்த வகையில் கடந்த இரண்டு சீசன்களுக்கு முன்பான பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமனுக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகி இருந்தனர்.
குறிப்பாக அந்த சீசனின் சக போட்டியாளரான அசீம் உடனான சண்டையில் மிகவும் நிதானமாக பேசியதாகவும் நேர்மை தவறாமல் விளையாடியதாகவும் ரசிகர்கள் தரப்பு பாராட்டி வந்தது. மேலும் இவரே அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக வருவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அசீம் தனது பி.ஆர் டீமை வைத்து அந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது.
சர்ச்சையில் சிக்கிய விக்ரமன்
மேலும் பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்பு விக்ரமின் மீது இளம்பெண் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். அதில் விக்ரமன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தன்னிடமிருந்து பணத்தைப் பெற்று திருப்பித் தராமல் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார். இது குறித்து சமூக வலைதளங்களில் விக்ரமனின் மீது அவதூறு பரப்பப்பட்டது. இருப்பினும் விக்ரமன் அந்த குற்றச்சாட்டுகளுக்கு தான் பொறுப்பில்லை எனவும் சில ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.
காதலியுடன் திருமணம்
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் விக்ரமனின் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. பிக் பாஸ் விக்ரமன் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் உதவி இயக்குனராக பணியாற்றிய ப்ரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்கள் இருவரும் behindwoods யூட்யூப் சேனலுக்கு இன்டர்வியூ ஒன்றை அளித்துள்ளனர். அதில் இருவருக்கும் இடையே உள்ள சந்திப்பு காதல் மற்றும் திருமணம் வரையிலான அவர்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
ஸ்ட்ரிக்ட் ஆபிசர் விக்ரமன்
இதில் தன்னை முதன் முதலாக பார்த்தபோது தங்களுக்கு என்ன தோன்றியது என விக்ரமன் கேட்ட கேள்விக்கு, அவரது மனைவி பிரீத்தி உங்களை ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என நினைத்திருந்ததாகவும் காலப்போக்கில் அது மாறியதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் விக்ரமன் அரசியலில் அதிக நேரம் செலவிடுவதாகவும் தன்னுடன் செலவிடும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் பிரீத்தி கேட்டுக்கொண்டார்.
இன்றும் பிரீத்தி விக்ரமனை வாங்க போங்க என்று அழைப்பது வேண்டாம் எனவும் விக்ரமன் வா போ என்றே அழைக்கலாம் எனவும் கூறினார். மேலும் ஏதாவது பக்கெட் லிஸ்ட் உள்ளதா என்ற கேள்விக்கு விக்ரமுடன் சேர்ந்து ஐரோப்பா டூர் செல்ல வேண்டும் எனவும் கூறினார் .ப்ரீத்தி சேலை அணிவதை விட மாடர்ன் டிரஸ்ஸில் அழகாக இருப்பதாகவும் கூறினர். இவர்களது இந்த கியூட் இன்டர்வியூவை கண்ட ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இவர்களது திருமணத்திற்கு பிக்பாஸ் பிரபலங்கள் ரச்சிதா மற்றும் சிவின் ஆகியோர் சென்று இருந்தனர்.
டாபிக்ஸ்