Bigboss 7 Tamil: ‘அவங்கள வெறுக்காதீங்க.. வேணும்னா…’ - ரசிகர் படைக்கு மாயா அறிக்கை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigboss 7 Tamil: ‘அவங்கள வெறுக்காதீங்க.. வேணும்னா…’ - ரசிகர் படைக்கு மாயா அறிக்கை!

Bigboss 7 Tamil: ‘அவங்கள வெறுக்காதீங்க.. வேணும்னா…’ - ரசிகர் படைக்கு மாயா அறிக்கை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 18, 2024 07:29 AM IST

இவர் கேப்டனாக இருந்த போது, இவர் காட்டிய அதிகாரம், தன்னுடைய கேங்குடன் சேர்ந்து அர்ச்சனாவை வார்த்தை போரால் தாக்கியது உள்ளிட்டவை இவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

பிக்பாஸ் மாயா!
பிக்பாஸ் மாயா!

இவர் கேப்டனாக இருந்த போது, இவர் காட்டிய அதிகாரம், தன்னுடைய கேங்குடன் சேர்ந்து அர்ச்சனாவை வார்த்தை போரால் தாக்கியது உள்ளிட்டவை இவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

அதற்காக, வார இறுதியில் கமலும் அவரை வெளுத்து வாங்கினார். அதன் பின்னர் ஒருவாரம் அமைதியாக இருந்தவர், மீண்டும் தன்னுடைய கேமை விளையாட ஆரம்பித்தார்.

ஆனால், இதில் கொஞ்சம் மாறுதலாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார். இது பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. போட்டி இறுதியில் இவர் நிச்சயம் டைட்டில் வின்னராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 வது ரன்னராக கூட வராமல் வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து மாயா வெளியிட்டு இருக்கும் பதிவில், “ என் நெஞ்சுக்கு நெருக்கமான மாயா ரசிகர் படையே.. ஐ. லவ். யூ

நீங்கள் என் மீது காட்டும் அன்பிற்கு நன்றி. என்னுடைய குறைகளை அனுமதித்து, என்னுடைய போராட்டத்தில் உறுதுணையாக நின்றதற்காக நன்றி.

 

அன்பு மழையில நனைய வச்சிட்டீங்க.. அதற்கான மரியாதை.. அளவில்லா அன்பு.. என்னுடைய இதயத்துடிப்பு நிற்கும் வரை இருக்கும்.

இந்த 105 நாட்கள் என்னுடைய மரணப்படுக்கையிலும் மறக்காது. உங்களுக்காகத்தான் வேலை பார்க்கப்போறேன். எல்லாமே உங்களுக்காகத்தான்.

நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள். என்னுடைய போராட்டத்தில் கடைசி வரை சண்டை போட்டு இருக்கிறீர்கள் அதற்கு நான் கடைசி வரை நன்றியுடன் இருப்பேன்.

எனக்கு ஒரு ஆசை;என் ரசிகராக நீங்கள் இருந்தால் என்னை ரசியுங்கள். மற்றவர்களையும் ரசியுங்கள்; ஆனா வேற ஒருவரை வெறுக்காதீர்கள். என்னை வெறுக்குறவர்களாக இருந்தால் கூட அவர்களை வெறுக்காதீர்கள்.

வேண்டுமென்றால் காதலிங்க..போற்றுவார் போற்றட்டும்.. தூற்றுவார் தூற்றட்டும்.. நம்ம நம்ம வேலையை பார்ப்போம். நாம நிச்சயமா சந்திப்போம்.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.