Bigboss Arun: ‘அதுல எனக்கு வருத்தமா..? நீங்க என்ன சீரியஸா பாத்திட்டீங்க..’ - முத்து வெற்றி குறித்து அருண்
Bigboss Arun: நான் போட்டியாளர்களுடன் இருந்திருந்தால், அந்த பரபரப்பு வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஆனால் நான் வெளியேற்றப்பட்டுவிட்டதால், பார்வையாளர்களுடன் இருந்தேன். அந்த பரபரப்பு வேறுமாதிரியாக இருந்தது.- முத்து வெற்றி குறித்து அருண்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிபோட்டியின் போது பார்வையாளராக இருந்த அருண் முகம் வாடி இருந்ததாக சமூகவலைதளங்களில் பேசப்பட்டது. இந்த நிலையில் அது குறித்தான விஷயங்களுக்கு அவர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்
அவர் பேசும் போது, ‘எனக்கு பிக்பாஸின் இறுதிப்போட்டியில் நடந்த விஷயங்கள் பெரிதாக பிடிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால் உண்மையில் அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது; எனக்கு பிக் பாஸ் இறுதிப்போட்டி மிகவும் பிடித்திருந்தது. நான் அதனை சீரியஸாக பார்த்துக்கொண்டிருந்த காரணத்தால், மக்கள் எல்லோரும் என்னை சீரியஸாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நிறைய நல்ல விஷயங்கள்
இந்த நிகழ்ச்சியால் எனக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறன. இந்த நிகழ்ச்சியில் பயணப்பட்டதின் மூலமாக மனிதனாக நிதானமாகியிருக்கிறேன். வாழ்கையை பார்க்கும் என்னுடைய கண்ணோட்டம் மாறியிருக்கிறது. நான் போட்டியாளர்களுடன் இருந்திருந்தால், அந்த பரபரப்பு வேறுமாதிரியாக இருந்திருக்கும். ஆனால் நான் வெளியேற்றப்பட்டுவிட்டதால், பார்வையாளர்களுடன் இருந்தேன். அந்த பரபரப்பு வேறுமாதிரியாக இருந்தது.
முத்துக்குமரன் - செளந்தர்யா
முத்துக்குமரனும் சௌந்தர்யாவும் இறுதிப்போட்டியாளர்களாக நின்று கொண்டிருக்கும் பொழுது, யாருக்கு பிக்பாஸ் வின்னர் டைட்டில் கிடைக்கும் என்பதை எங்களால் கணிக்கவே முடியவில்லை.
காரணம் என்னவென்றால் முத்து குமரனுக்கு தனி அடையாளம் இருக்கிறது. அவர் ஆரம்பத்தில் இருந்தே மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் சௌந்தர்யாவுக்கு அவர் உருவாக்கி வைத்திருந்த அலை, மக்களிடம் அவருக்கு ஏகோபித்த ஆதரவை பெற்றுத்தந்தது. அதனால் யாருக்கு அது கிடைக்கும் என்பதை கணிக்கவே முடியவில்லை. அங்கு இருந்தவர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது; அதில் எனக்கு விருது கிடைக்கவில்லையே என்று வருத்தமடைந்தீர்களா? என்று கேட்கிறீர்கள்… அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. காரணம் என்னவென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி அதை விட நிறைய விஷயங்களை கொடுத்திருக்கிறது.’ என்று பேசினார்.
முன்னதாக, விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 8 தனது இறுதிப் போட்டியுடன் ஞாயிறு (19 ஜனவரி 2025)அன்று நிறைவு பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த சீசன், 2024 அக்டோபரில் "ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு" தொடங்கியது.
24 போட்டியாளர்கள் இடையே தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், வாரந்தோறும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். கடுமையான போட்டிகளுக்கு பிறகு, முத்துக்குமரன், சௌந்தர்யா, பவித்ரா, விஷால் மற்றும் ரயான் ஆகியோர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதி, விஜய் டிவி சேனல் தலைவர் ஆர். பாலச்சந்திரன் மற்றும் கிளஸ்டர் ஜியோ ஸ்டார் தலைவர் கிருஷ்ணன் குட்டியுடன் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 8 தலைப்பு வெற்றியாளராக முத்துக்குமரனை அறிவித்தார். முத்துக்குமான் பிக்பாஸ் வின்னர் என்ற டைட்டிலுடன் 40,50,000 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்று, கோடிக்கணக்கான மக்களின் மனதையும் வென்றார். சௌந்தர்யா இந்த சீசனின் முதல் ரன்னர் அப் ஆக அறிவிக்கப்பட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்