நாமினேஷன் லிஸ்ட் தயார்! யாருக்கு அதிக ஓட்டு! வெளியேறப்போகும் அந்த நபர் யார்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நாமினேஷன் லிஸ்ட் தயார்! யாருக்கு அதிக ஓட்டு! வெளியேறப்போகும் அந்த நபர் யார்?

நாமினேஷன் லிஸ்ட் தயார்! யாருக்கு அதிக ஓட்டு! வெளியேறப்போகும் அந்த நபர் யார்?

Suguna Devi P HT Tamil
Published Oct 28, 2024 01:41 PM IST

பிக் பாஸ் தெரிவிக்கும்போது போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யும்போது நாமினிசம் செய்யப்படும் நபரின் குணநலங்களாக கூறியதையும் சேர்த்து கூறி பிக் பாஸ் யார் யார் எத்தனை ஓட்டுகள் பெற்று நாமினேஷன் லிஸ்டில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாமினேஷன் லிஸ்ட் தயார்! யாருக்கு அதிக ஓட்டு! வெளியேறப்போகும் அந்த நபர் யார்?
நாமினேஷன் லிஸ்ட் தயார்! யாருக்கு அதிக ஓட்டு! வெளியேறப்போகும் அந்த நபர் யார்?

இந்த சீசனில் போட்டி தொடங்கிய முதல் நாளே ஆண்கள் அணி பெண்கள் அணி என இருவேறு அணிகள் பிரிக்கப்பட்டன மேலும் இந்த இரு அணிகளுக்கும் தனித்தனியே சமையல் சாப்பாடு என அனைத்தும் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டன மேலும் இருவருக்கும் பொதுவான பயன்படுத்தக்கூடிய பொருட்களில் சமரசம் செய்து கொள்ளாமல் போட்டியாளர்கள் மல்லு கட்டி வந்து கொண்டிருந்தனர்.

விறு விறு பிக்பாஸ் 

பிக் பாஸ் சீசன் நாளுக்கு நாள் அத நான் சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 22 வது நாளான இன்று மூன்றாவது நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இது குறித்து பிக் பாஸ் தெரிவிக்கும்போது போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யும்போது நாமினிசம் செய்யப்படும் நபரின் குணநலங்களாக கூறியதையும் சேர்த்து கூறி பிக் பாஸ் யார் யார் எத்தனை ஓட்டுகள் பெற்று நாமினேஷன் லிஸ்டில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

 இந்த லிஸ்டில் முதலாவது இடத்தில் அருண் பிரசாத் ஐந்து வாக்குகளுடன் உள்ளார். ஜாக்குலின் மற்றும் சத்யா நான்கு ஓட்டுகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். ரஞ்சித் மூன்று ஓட்டுகளுடனும் சுனிதா, ஜெஃப்ரி மற்றும் பவித்ரா ஆகியோர் இரண்டு ஓட்டுகளுடனும் உள்ளனர். இந்நிலையில் இவர்களில் ரசிகர்களின் அதிகமாகவே பெற்று யார் காப்பாற்றப்படுவார் என்பது வார இறுதி எபிசோடில் தெரியவரும். 

புதிய போட்டியாளர்கள் 

இந்நிலையில் நான்காவது வாரமான இந்த வாரத்தில் நாமினேஷன் லிஸ்டில் இருந்து விலக்கு அளிக்கும் டாஸ்க் ஒன்று பிக்பாஸ் தர உள்ளார். இந்த டாஸ்க் வெற்றி பெறும் அணியில் இருந்து ஒரு நபரை மற்ற அணியினர் அனைவரும் சேர்ந்து நாமினேஷனில் இருந்து விலக்கி வைக்க முடியும். மேலும் இந்த டாஸ்க் மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த மூன்று வாரங்களாக நாமினேஷன் பிரீடாஸ்க் மிகவும் கடினமாக இருந்து வந்தது. தற்போது இந்த டாஸ்க்கும் அவ்வாறே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வாரத்தின் இறுதி அல்லது அடுத்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய போட்டியாளர்கள் யாரேனும் நுழைவார்கள் என கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. புதிய போட்டியாளர்களால் போட்டியின் சுவாரசியம் கூடும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.