பிக்பாஸ் பிரபலம் நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள்: தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தங்கத் தேர் இழுத்தனர்.

<p>நடிகர் ஹரிஷ் கல்யாண்</p>
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் ஒன்றில் மூன்றாம் இடத்தை பிடித்தவர் ஹரிஷ் கல்யாண்.
பொறியாளன், வில் அம்பு, பியார் ப்ரேமா காதல் உள்ளிட்ட சில கவனிக்கத்தக்க படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இம்மாதம் ஜூன் 29ம் தேதி நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், மதுரையை சேர்ந்த அவரது ரசிகர்கள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட ஹரிஷ் கல்யாண் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பூங்கா முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.
முன்னதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் பெயரில் பூங்கா முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தததோடு, தொடர்ந்து தங்கத்தேரை கோயிலை சுற்றி இழுத்தனர்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.