தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Abishek Raaja: “பிடிவாதக்காரி.. இவன் வேண்டாம்னு எத்தனையோ பேர் சொன்னாங்க.. எனக்காக நின்னா” அபிஷேக் ராஜா எமோஷனல்!

Abishek Raaja: “பிடிவாதக்காரி.. இவன் வேண்டாம்னு எத்தனையோ பேர் சொன்னாங்க.. எனக்காக நின்னா” அபிஷேக் ராஜா எமோஷனல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 15, 2024 09:42 AM IST

Abishek Raaja: நானும் சுவாதியும் பழகிக் கொண்டிருந்தபோது பலமுறை இந்த உறவு வேண்டாம் இது கல்யாணத்தில் முடியாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவளுக்கு ஒரு பிடிவாதம் இருந்தது. - அபிஷேக் ராஜா எமோஷனல்!

Abishek Raaja: “பிடிவாதக்காரி.. நான்தான் வேணும்னு நின்னா; அவன் வேண்டாம்னு எத்தனையோ பேர் சொன்னாங்க”- அபிஷேக் ராஜா எமோஷனல்
Abishek Raaja: “பிடிவாதக்காரி.. நான்தான் வேணும்னு நின்னா; அவன் வேண்டாம்னு எத்தனையோ பேர் சொன்னாங்க”- அபிஷேக் ராஜா எமோஷனல்

Abishek Raaja:  யூடியூப்பில், பல திரைப்படங்களை விமர்சனம் செய்து பிரபலமானவர் அபிஷேக்ராஜா. அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக, பிக்பாஸ் தமிழ் 5 ஆவது சீசனிலும் போட்டியாளராக களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீட்டிற்குள் அவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொண்ட விதமும், பேசிய வார்த்தைகளும் மக்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றன.

நெட்டிசன்கள் இவர் பேசுவதை க்ரிஞ்ச் என்று கூறி ட்ரோல் செய்தனர். இதனையடுத்து அவர் அவர் பிக்பாஸில் நுழைந்த 21ம் நாள் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் அவர் அண்மையில் தன்னுடைய காதலியான சுவாதி நடராஜனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்கள் அண்மையில் கலாட்டா சேனலுக்கு பேட்டியளித்தனர்.

அவன் வேண்டாம் என்று சொன்னார்கள் 

இது குறித்து அபிஷேக் பேசும் போது, “உண்மையில் எனக்கும் என்னுடைய கடந்த காலம், அதில் ஏற்பட்ட விவாகரத்து உள்ளிட்டவை பயங்கரமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனாலும் நாம் அதிலிருந்து மீண்டு கடந்து சென்று தான் ஆக வேண்டும். 

நானும் சுவாதியும் பழகிக் கொண்டிருந்தபோது பலமுறை இந்த உறவு வேண்டாம் இது கல்யாணத்தில் முடியாது என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன். ஆனால் அவளுக்கு ஒரு பிடிவாதம் இருந்தது. அதற்கு அவள், அவளது வீட்டில் வளர்ந்த விதமும் ஒரு காரணம். என்னுடன் இருந்த பெரும்பான்மையான நண்பர்கள், அவன் உனக்கு வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னார்கள். ஆனால் அவள் எனக்காக நின்றார்கள் ” என்று பேசினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

சுவாதி பேசும் போது, “எப்போதுமே ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் நாம் இருந்தால் அதிலிருந்து நிச்சயமாக வெளியே வர வேண்டும். ஆனால்,என்னுடைய விஷயத்தில் எங்களுக்கு இடையே நடக்கும் பிரச்சினையான எங்கே முடியும் என்று எனக்கு முன்னதாகவே தெரியும். அதனால் அதை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” என்று பேசினார். 

பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டி!

 

அந்த பேட்டியில் பேசிய அபிஷேக், “இவளிடம் நான், நானே ஒரு ஏமாற்றுப்பேர்வழி.. நீ என்னை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறாய் என்று சொல்லி இருக்கிறேன். சுவாதியை பொருத்தவரை, அவர் என் நண்பராக இருந்து, கேர்ள் ஃப்ரண்டாக மாறி, மனைவியாக மாறியவர். அதனால் அவளுக்கு என்னைப்பற்றி எல்லாவிஷயங்களும் தெரியும்.

என்னை அடைய வேண்டும் என்று அவர் எடுத்துக்கொண்ட விடாமுயற்சிதான் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காரணம், அப்போது நான் வேறொரு சோனில் இருந்தேன். ஆனால், இப்போது நான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். சுவாதிக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லத்தோன்றுகிறது.

தாய் போல அன்பு

அவளது கலரை பற்றியெல்லாம் பேசுகிறார்கள். என்னைப் பொருத்தவரை இந்த உலகத்திலேயே அதிக கவர்ச்சியான பெண் என்றால், அது அவள்தான். ஒரு தாய் ஒரு குழந்தையை ஒரு வித ரசிப்புத்தன்மையோடு கொஞ்சுவார்கள் தெரியுமா? அதே போலத்தான் சுவாதி என்னை பார்த்துக்கொள்வாள். அது எனக்கு ஒரு பயங்கரமான அடிக்‌ஷன் என்று கூறுவேன்.

என்னை இவள், இவன் நன்றாக வேலை பார்க்கிறானே.. இவன் சூப்பராக இருக்கிறானே என்ற கோணத்தில் பார்த்துக்கொண்டே இருப்பாள். ஆகையால், அதையே நம்முடைய கோலாக மாற்றி பெரிய ஆளாக வரவேண்டும் என்று தோன்றும். கல்யாணத்தில் தாலிக்கட்ட இன்னும் 10 நிமிடங்கள்தான் இருக்கின்றன. அவள் என்னிடம் என்னை உண்மையாகவே காதலிக்கிறாய் போலிருக்கிறது. கல்யாணமெல்லாம் செய்து கொள்கிறாய் என்றாள். உடனே நான் அடிப்பாவி நான் என்னை இன்னும் எவ்வளவுதான் நிரூபிக்க வேண்டும் என்று கேட்டேன்.” என்று பேசினார்.

சுவாதி பேசும் போது, “என்னுடைய அப்பா அம்மாவிற்கு மகளை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது. அவருக்கும் எனக்கும் 8 வயது வித்தியாசம். வேறு வேறு சாதி; இருப்பினும், நான் இவரை கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் இருந்ததற்கு காரணம் என்னுடைய பெற்றோர்கள்தான். ஆம், அவர்கள் என்ன நடந்தாலும், எவ்வளவு சண்டை வந்தாலும், விவாகரத்து என்ற முடிவுக்கு செல்ல வில்லை. அது எனக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்தது.” என்று பேசினார்.

அபிஷேக் ராஜா கடந்த 2017 ம் ஆண்டு தீபா நடராஜனை திருமணம் செய்தார். ஆனால் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இருவரும் கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: