எந்த வேலையும் செய்யாத பாஸ் யார்?தூண்டி விட்ட விஜய் சேதுபதி! பிக்பாஸ் புரோமோ!
தமிழ் பிக் பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் ஆறாம் தேதி அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் புதுவிதமான விதிமுறைகளும் புது தொகுப்பாளரும் என முழுக்க முழுக்க புதிய பாணியிலேயே இந்த பிக் பாஸ் நடந்து வருகிறது.

தமிழ் பிக் பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் ஆறாம் தேதி அன்று தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த சீசனில் புதுவிதமான விதிமுறைகளும் புது தொகுப்பாளரும் என முழுக்க முழுக்க புதிய பாணியிலேயே இந்த பிக் பாஸ் நடந்து வருகிறது. “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என்ற மேற்கோளுடன் புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதியுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் மூன்றாவது வாரங்களாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு வார இறுதியிலும் விஜய் சேதுபதி போட்டியாளர்களை கேள்வி கனைகளால் துளைத்து வருகிறார்.
பிக்பாஸ் புரோமோ
பிக் பாஸ் தொடங்கி இருபத்தி ரெண்டாவது நாளான இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கடந்த வாரம் நடந்த ஹோட்டல் டாஸ்க் எந்த வேலையும் செய்யாமல் அனைவரும் வேலை வாங்கிக்கொண்டு மேனேஜராக நடந்த போட்டியாளரை தேர்வு செய்யுமாறு விஜய் சேதுபதி போட்டியாளரிடம் கூறுகிறார். இதனை அடுத்து பெண்கள் அணியில் சுனிதா அதிக அதிகம் நபரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகமாக மேனேஜர் போல் அனைவரும் வேலை வாங்கும் நபராக இருப்பதாக ஜாக்குலின் மற்றும் தர்ஷிகா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.
மேலும் சூனிதாவிற்கு வீட்டு வேலைகள் செய்ய விருப்பமில்லை எனவும், அனைவரையும் வேலை வாங்கும் பாஸியாக இருக்கிறார் எனவும் சக போட்டியாளர்கள் கூறுகின்றனர். ஆண்கள் அணியில் முத்துக்குமாரை அதிகம் பேர் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் அவர் சரியாக வேலை பார்ப்பதில்லை எனவும், அணைவரிடம் இருந்தும் வேலை வாங்குகிறார் எனவும் கூறுகிறார்.