தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Amrita Pandey: சடலமாக மீட்கப்பட்ட நடிகை அமிர்தா பாண்டே.. எனது பயணத்தை மூழ்கடித்து.. வாட்ஸ்அப்பில் கசிந்த முக்கியத் தகவல்

Amrita Pandey: சடலமாக மீட்கப்பட்ட நடிகை அமிர்தா பாண்டே.. எனது பயணத்தை மூழ்கடித்து.. வாட்ஸ்அப்பில் கசிந்த முக்கியத் தகவல்

Marimuthu M HT Tamil
Apr 30, 2024 02:11 PM IST

Amrita Pandey: அம்ரிதா பாண்டே என்ற போஜ்புரி நடிகை பீகாரின் பாகல்பூரில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நடிகை அமிர்தா பாண்டே
வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நடிகை அமிர்தா பாண்டே

ட்ரெண்டிங் செய்திகள்

போலீசார் எந்த தற்கொலைக் குறிப்பையும் மீட்கவில்லை என்றாலும், அவர் இறப்பதற்கு முன்பு, காலை 10:16க்கு வெளியிட்ட ஒரு ரகசிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை சுட்டிக்காட்டி சந்தேகிக்கின்றனர். 

அதில் அம்ரிதா பாண்டே எழுதியிருந்ததாவது, "அவரது வாழ்க்கைப் பயணம் இரண்டு படகுகளில் இருந்தது. நான் எனது வாழ்க்கைப் பயணத்தை மூழ்கடித்து, அவரது பயணத்தை எளிதாக்குகின்றேன்" என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

நடிப்பதற்கான போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் அம்ரிதா பாண்டே மனச்சோர்வடைந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும் நடிகை அம்ரிதா பாண்டேவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். 

அனிமேஷன் இன்ஜினியர் சந்திரமணி ஜாங்கட் என்பவரை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் வசித்து வந்தார், அம்ரிதா பாண்டே. சந்திரமணி ஜாங்கட், சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரைச் சார்ந்தவர். 

ஏப்ரல் 18ஆம் தேதி, பீகார் மாநிலம், பாகல்பூரில் நடந்த அவரது சகோதரியின் திருமணத்தில் தம்பதிகளான அனிமேஷன் இன்ஜினியரும் சந்திரமணி ஜாங்கட்டும் கலந்து கொண்டனர். 

 திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் சந்திரமணி ஜாங்கட், மும்பை வீட்டிற்குத் திரும்பியபோது, அமிர்தா பாண்டே, அவரது தாயார் வீட்டிலேயே சிறிது நாட்கள் தங்க முடிவு செய்தார். 

மேலும் தனது சகோதரி வீணா பாண்டேவுக்கும், அவரது கணவருக்கும் இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், "உங்கள் இருவருக்கும் திருமண வாழ்க்கை இனிதே அமைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். ஐந்து நாட்களுக்கு முன்பு, அம்ரிதா பாண்டே, ஒரு திருமண உடையில் தனது படத்தையும் பகிர்ந்து கொண்டார். அவரது லேட்டஸ்ட் பதிவுக்கு அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அம்ரிதா பாண்டே கடைசியாக 'பிரதிஷோத்' என்ற வலைத் தொடரில் நடித்திருந்தார். மேலும் போஜ்புரி சூப்பர் ஸ்டார் கேசரி லால் யாதவுடன் 'தீவனபன்' படத்தில் அவரின் ஜோடியாக நடித்தார். மேலும், இந்தி திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தான், நடிகை அம்ரிதா பாண்டே ஆதம்பூர் ஷிப் காட்டில் உள்ள தனது திவ்யதர்மா அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 27. 

படுக்கையில் கிடந்த நடிகை அம்ரிதா பாண்டேவின் உயிரற்ற உடலை ஜோக்சர் போலீசார் கண்டுபிடித்தனர். ஊடக அறிக்கைகளின்படி, சனிக்கிழமையான ஏப்ரல் 27ஆம் தேதி, பிற்பகல் 3:30 மணியளவில் அம்ரிதாவின் சகோதரி தனது அறைக்குள் நுழைந்தார்.

 அங்கு நடிகை அம்ரிதா பாண்டே உயிரற்ற நிலையில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனைத்தொடர்ந்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அம்ரிதா முன்னரே இறந்துவிட்டதாக அறிவித்தனர். அவரது மரணம் குறித்து பீகார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை உதவி மையத் தகவல்:

தற்கொலை செய்வதால் குடும்பத்தைச் சார்ந்த அப்பாவி ரத்த உறவுகள் காலம்தோறும் அவதிக்குள்ளாகின்றன. 

உங்களுக்கு தற்கொலை எண்ணங்களில் இருந்து மீள ஆதரவு தேவைப்பட்டால் அல்லது யாராவது தெரிந்தால், உங்களுக்கு அருகிலுள்ள மனநல நிபுணரைத் தொடர்புகொள்ளுங்கள். உதவி எண்கள்: ஆஸ்ரா: 022 2754 6669; சினேகா இந்தியா பவுண்டேஷன், சென்னை: +914424640050 மற்றும் சஞ்சீவினி: 011-24311918

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்