RIP Bhavatharini: பவதாரிணியின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படுகிறது? - கிடைத்தது தகவல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Bhavatharini: பவதாரிணியின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படுகிறது? - கிடைத்தது தகவல்!

RIP Bhavatharini: பவதாரிணியின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படுகிறது? - கிடைத்தது தகவல்!

Marimuthu M HT Tamil
Jan 26, 2024 08:00 PM IST

பவதாரிணியின் உடல் அவரது சொந்த மாவட்டத்தில் நாளை அடக்கம் செய்யப்படவுள்ளது.

பவதாரிணியின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படுகிறது? - கிடைத்தது தகவல்!
பவதாரிணியின் உடல் எங்கு அடக்கம் செய்யப்படுகிறது? - கிடைத்தது தகவல்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று ( ஜன.25) மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். இரைப்பை புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 47. இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். பவதாரிணி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜவின் மகள். கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி ஆவார். பவதாரிணி கடந்த 2005ஆம் ஆண்டு சபரி ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சபரி ராஜன் ஹோட்டல் பிஸினஸ் செய்து வருகிறார். மேலும் பாவதாரிணியும் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார்.

இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் பாடியுள்ளார். இளையராஜா இசையில் பாரதி படத்தில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் பாடிய பவதாரிணிக்கு, சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது. முன்னதாக இவர், ‘ராசய்யா’ படத்தில் பாடகியாக அறிமுகமானார். மேலும் இசையமைப்பாளர்களான தேவா மற்றும் சிற்பி ஆகியோரது இசையிலும் பவதாரிணி பாடியுள்ளார்.

‘அழகி’ படத்தில் இவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. மேலும், ‘உல்லாசம்’ படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த 'அநேகன்’ படத்தில் 'ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி' பாட்டும் பவதாரிணியின் தனித்துவமான குரலுக்கு மிகப்பெரிய சான்றாகும்.

பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு, தியாகராய நகரில் உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரைப்பிரபலங்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து 10 மணிக்குப் பின், பவதாரிணியின் உடல் சாலை மார்க்கமாக இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இளையராஜாவின் பங்களா இருக்கும் லோயர்கேம்பில் பவதாரிணியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைப்புரமாக இருந்தாலும், அவரது அன்னை சின்னத்தாய், அவரது மனைவி ஜீவா ஆகியோரது நினைவிடம், அவரது லோயர்கேம்ப் பங்களா எனப்படும் தோட்டத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தாய் மற்றும் மனைவியின் நினைவுநாள், தீபாவளியன்று அங்கு செல்லும் இளையராஜா நினைவிடங்களில் மனம் உருக வழிபட்டுவிட்டு, தியானம் செய்வார் எனக்கூறப்படுகிறது. அத்தகைய இடத்தின் அருகில் தான் பவதாரிணியின் உடலும் அடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.