தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Bharathiraja Post About Singer Bavatharani Sudden Death

Rip Bavatharani: 'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவேன்' - கலங்கிய பாரதிராஜா

Aarthi Balaji HT Tamil
Jan 26, 2024 07:04 AM IST

பவதாரணி மரணம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

பாரதிராஜா - பவதாரணி
பாரதிராஜா - பவதாரணி

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்று உள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார்.

5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். அப்படி இருந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார் . இன்று மாலை அவர் உடல் சென்னை வருகிறது.

பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பவதாரணி மரணம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

அதில், “ என் நண்பனுக்கு

எப்படி ஆறுதல்

சொல்வேன்..

மகள் பவதாரிணியின்

மறைவு, எங்கள்

குடும்பத்தினருக்கு

ஈடு செய்யமுடியாத

பேரிழப்பாகும் " எனக் குறிப்பிட்டு உள்ளார்.

பவதாரணி, திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜவின் மகள், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி. இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். ஆனால், இவரது குரல் மிகவும் வித்யாசமானதாக இருக்கும். 

இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு ஒண்ணு பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார்.

இவர் நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைந்தார். இவர் ரேவதி இயக்கிய பிர் மிலேங்கே படத்திற்கும் இசையமைத்தார். இவர் வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார்.

இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு விளம்பர நிறுவன நிர்வாகி. இவர் சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்தவர்.

அழகி படத்தில் இவர் பாடிய ஒளியிலே தெரிவது தேவதையா என்ற பாடல் படு ஹிட்டான பாடல். மேலும் இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டானது. அதில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய அண்மையில் ஹிட்டான பாடல் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்பதாகும். இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.