Bhanupriya: பாக்யராஜால் ஏற்பட்ட அவமானம்.. பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பானுப்பிரியா.. காரணம் என்ன?
நடிகை பானுப்பிரியா, பாக்யராஜால் ஏற்பட்ட அவமானம் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.

பானுப்ரியா அபாரமான அழகும், நடிப்பும் கொண்ட நடிகை. தென்னிந்தியாவில் ஒரு காலத்தில் ஜொலித்து கொண்டு இருந்தார். பானுப்ரியாவை பார்த்ததும், பெயரை கேட்டதும் பெரும்பாலான ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அழகிய முகம் தான்.
எண்பது, தொண்ணூறு காலங்கள் பானுப்ரியாவின் பொற்காலம். அந்த நேரத்தில் அவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக இருந்தார். பானுப்ரியாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மாவட்டத்தில் உள்ள ரங்கம்பேட்டை. பானுப்ரியா பதினேழு வயதிலிருந்தே நடிப்புத் துறையில் இருக்கிறார். அவரின் முதல் தமிழ் திரைப்படம் 1983 இல் வெளியான மெல்லப் பேசுங்கள்.
அதன் பிறகு பானுப்ரியாவுக்கு தெலுங்கில் இருந்து அதிக வாய்ப்புகள் வந்தன. பானுப்ரியா தமிழ், தெலுங்கில் மாறி மாறி படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. நடிகை ஜிதேந்திரா, ரஜினிகாந்த், ரிஷி கபூர் மற்றும் பூனம் தில்லான் ஆகியோருடன் நடித்துள்ளார். நடிகர் ஆதர்ஷ் கவுஷல் என்ற அமெரிக்க கிராபிக்ஸ் பொறியாளரை 1998 இல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பானுப்ரியா தனது கணவரை விட்டுவிட்டு சென்னை திரும்பினார். பானுப்ரியா காதல் திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, கலிபோர்னியாவில் திருமணம் செய்து கொண்டார்.
