Bhakyalakshmi Serial: கோவத்தால் முடித்து வைக்கப்படும் சீரியல்... இனி எல்லாமே மாறும்! விஜய் டிவியின் அதிரடி முடிவு!
Bhakyalakshmi Seriyal: விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்த பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம். அதற்குப் பதிலாக டிஆர்பிஐ அதிகரிக்கும் சீரியல் ஒன்றை பிரைம் டைமில் ஒளிபரப்பவும் விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாம்.
ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் ஏராளம். குடும்பக் கதை, காதல் கதை, பெண்ணின் முன்னேற்றம், கல்லூரி காதல் என பல வெரைட்டிகளில் சீரியல்களை தயாரித்து அதனை ஒளிபரப்பி வருகிறது.
அந்த வகையில், டிஆர்பிக்காக பல வேலைகளை செய்துவரும் விஜய் டிவி, தனது பிரைம் டைம் சீரியல்கள் குறித்தும், ரியாலிட்டி ஷோக்கள் குறித்தும் பெரும் மெனக்கெடல்களை செய்து வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் பல ஆண்டாக இடம் பிடித்து வந்தது பாக்கியலட்சுமி சீரியல்.
பாக்கியலட்சுமி
வாழ்க்கையில் படிப்பும் லட்சியமும் தான் முன்னேற்றத்தை தரும் என எண்ணும் நபருக்கு, பள்ளிப் படிப்பையே முறையாக முடிக்காத பெண்ணுடன் குடும்பத்தார் கட்டாய திருமணம் செய்து வைத்தால் என்ன ஆகும் என்பதே கதையின் அடிப்படைக் கதை.
பெண்கள் தைரியமாக, தனது சொந்தக் கால்களில் நின்று, வாய் நிறைய ஆங்கிலம் பேசி வலம் வர வேண்டும் என நினைக்கும் ஆணாக உள்ளார் கோபிநாத். கணவன், குடும்பம், பிள்ளைகள் மட்டுமே தனது உலகமாக நினைத்து வாழும் பெண்ணாக உள்ளார் பாக்கியலட்சுமி.
கோபிநாத்திற்கும் பாக்கியலட்சுமிக்கும் திருமணம் நடந்து 3 பிள்ளைகள் பிறந்த நிலையிலும், கோபிநாத்திற்கு பாக்கியலட்சுமியை ஏற்க மனம் வரவில்லை. பாக்கியாவை குடும்ப வேலைக்கு மட்டும் தான் லாயக்கு என எப்போதும் வசைபாடி, திட்டி தீர்த்துக் கொண்டே இருப்பார். இருப்பினும், தன் மீது மாமனார் காட்டும் பாசத்திற்கும், தன் பிள்ளைகள் காட்டும் பாசத்திற்கும் கட்டுப்பட்டு தன் மீதி வாழ்க்கையை கழித்து வருகிறார்.
கோபியின் 2ம் திருமணம்
இந்த சமயத்தில் தான், கோபி தன் மனைவியாக வரும் பெண்ணுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என நினைத்தாரோ, அதே தகுதியுடன் இருக்கும் தனது கல்லூரி கால காதலியான ராதிகாவை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்க்கிறார். அவரும், கணவனால் கைவிடப்பட்டு, பெண் குழந்தையுடன் தவித்துவருவதைக் கண்டு, முதலில் நண்பனாக பழகி, பின் காதலர்களாகி, திருமணமும் செய்து கொண்டனர்.
புதுமைப் பெண்ணாக மாறிய பாக்கியா
கோபியின் மகனுக்கே திருமணமாகி பிள்ளை பிறந்த நிலையில், இவருக்கு திருமணம் இப்போது தேவையா என்ற கதையை மையமாக வைத்து தற்போது நாடகம் சென்று கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், தான் கணவனால் கைவிடப்படுவதை அறிந்த பாக்கியா, தன்னை ஒரு படித்த தொழில்முனைவோராக மாற்றியுள்ளார். பின் தன் குடும்பத்தை தனியே தாங்கி நிற்கும் பெண்ணாகவும் மாறியுள்ளார்.
ஒருகட்டத்தில் விறுவிறுப்பாக சென்றுவந்த இந்த சீரியல், சில மாதங்களாக ரசிகர்களின் ஆர்வமின்றி காணப்படுகிறது. இதனால், இந்த சீரியலின் டிஆர்பியை அதிகரிக்க கோபியின் தந்தை இறந்தவிட்டதாக கதையை அமைத்தனர். இருந்தும், இந்த சீரியல் பெரிதாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
முடிவுக்கு வரும் சீரியல்
மேலும், இந்த சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதால் தன்னை பலரும் திட்டி வருவதாகவும் தான் இந்த நாடகத்திலிருந்து வெளியேறுவதாகவும் கோபியாக நடித்து வந்த சதிஷ் கூறியிருந்தார்.
ரசிகர்களிடையே மவுசு குறைந்த இந்த நாடகத்திற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்ததால், திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப்படும் இந்த சீரியலை விஜய் டிவி விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளது.
முன்னேறும் மகாநதி
அதேசமயம், காண்ட்ராக்ட் மேரேஜ் எனும் நடிகர் விஜய்யின் பிரியமானவே கதையை மையமாக வைத்து மாலை 7 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வரும் மகாநதி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அந்த சீரியலில் வரும் விஜய்- காவேரி ஜோடி, அவர்களது ரொமான்ஸ் ரசிகர்களை கவர்ந்து வருவதால், பாக்கியலட்சுமி சீரியல் முடிந்த உடன் இந்த சீரியலை இரவு 8.30 மணிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது விஜய் டிவி.
மாற்றப்படும் கதைகள்
அத்துடன், இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர்- ராஜி ஜோடியை அதிக நேரம் காட்டும்படியாக காட்சிகளை அமைக்கவும்
இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி, கதையின் நாயகன் முத்துவிடம் வசமாக சிக்குவது போன்றும் கதைக்களத்தை விறுவிறுப்பாக மாற்ற விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.
அத்துடன் வரும் அக்டோபர் 6ம் தேதி, பிக்பாஸ் 8வது சீசன் தொடங்கவுள்ளதால், விஜய் டிவி ரசிகர்கள், விஜய் டிவியைத் தவிரி வேறு டிவி பக்கம் செல்லாமல் இருக்கவே இந்த முடிவை செய்துள்ளதாகவும் தெரிகிறது.